.jpg)
புது வருடத்தை வரவேற்கும் வகையில், பங்குச்சந்தை மொத்தப்புரள்வு பெறுமதியை 900 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக பதிவு செய்திருந்தது. அத்துடன் பிரதான சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் போன்ற பங்குகள் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. கொமர்ஷல் வங்கி மற்றும் லங்கா ஐஓசி பங்குகளை வெளிநாட்டவர்கள் விற்பனை செய்திருந்தனர். அக்ரோ அன்ட் முல்லர் அன்ட் பிப்ஸ் ஆகிய பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர்.
மொத்தப்புரள்வு பெறுமதியில் வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (கொமர்ஷல் வங்கி பங்களிப்புடன்) இந்த துறை 1.06% உயர்வை பதிவு செய்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 0.40 ரூபாவால் (0.33%) சரிந்து 120.00 ஆக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 3,574,513 பங்குகளால் குறைந்திருந்தது.
மொத்தப்புரள்வு பெறுமதியில் உற்பத்தித்துறை இரண்டாவதாக அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் பங்களிப்புடன்) இந்த துறை 1.34% உயர்வை பதிவு செய்திருந்தது. செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் பங்கொன்றின் விலை 1.20 ரூபாவால் (0.45%) உயர்ந்து 269.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.
மேலும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஐஓசி மற்றும் டிஸ்டிலரீஸ் பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கின் விலை 1.70 (0.75%) உயர்வடைந்து 229.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 205,100 பங்குகளால் அதிகரித்திருந்தது. லங்கா ஐஓசி பங்கொன்றின் விலை 2.20 ரூபாவால் அதிகரித்து 35.30 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 260,218 பங்குகளால் சரிவடைந்திருந்தது. டிஸ்டிலரீஸ் பங்கின் விலை 6.00 ரூபாவால் அதிகரித்து 199.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 116,447 பங்குகளால் அதிகரித்திருந்தது.
மத்திய வங்கியின் மூலம் நாணயமாற்றுக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட குறைப்பு காரணமாக தொடர்ந்தும் சந்தையில் நேர் பெறுமதிகளை அவதானிக்க முடியும்.