.jpg)
தொடர்ந்து ஆறு தினங்களாக நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்த பங்குச்சந்தை, டிஸ்டிலரிஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய விலைகள் சரிவுடன் வீழ்ச்சியடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீதான மொத்த பங்கு கைமாறல்களின் மூலம் புரள்வு பெறுமதி 450 மில்லியன் ரூபா பெறுமதியை எய்தியிருந்தது. மேலும், அடிப்படையாக உறுதியான ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய பங்குகளின் மீதும் அதிகளவு ஈடுபாடு காணப்பட்டது.
மொத்தப்புரள்வு பெறுமதியில் பன்முகத்துறை அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்களிப்புடன்). இந்த துறை 0.67% சரிவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 1.80 ரூபாவால் (0.79%) சரிந்து 227.10 ஆக பதிவாகியிருந்தது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் (2.90%) சரிந்து 33.50 ஆக பதிவாகியிருந்தது.
மொத்தப்புரள்வு பெறுமதியில் வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித்துறை இரண்டாவதாக அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது (கொமர்ஷல் வங்கி பங்களிப்புடன்). இந்த துறை 0.68% சரிவை பதிவு செய்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 1.90 ரூபாவால் (1.58%) உயர்ந்து 122.00 ஆக பதிவாகியிருந்தது.
மேலும், அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் டயலொக் ஆக்சியாடா பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தன. அக்சஸ் என்ஜினியரிங் பங்கின் விலை 0.20 (0.90%) சரிவடைந்து 22.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. டயலொக் ஆக்சியாடா பங்கொன்றின் விலை மாற்றமின்றி 9.90 ரூபாவாக பதிவாகியிருந்தது.