2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சன்சில்க் ஹெடகாரி காட்சிக்கூடத்தில் நிபுணத்துவம் வாய்ந்த சிகை பராமரிப்பு அறிவுரைகள்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்களின் வாழ்வை மேம்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முதற்தர சிகை பராமரிப்பு வர்த்தகநாமமான சன்சில்க் ஆனது, அண்மையில் நடைபெற்ற 'விவாஹா 250 மணமகள் கண்காட்சி' இல் ஹெடகாரி காட்சிக்கூடத்தை ஒழுங்கு செய்திருந்தது. ஜனவரி 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் BMICH இல் நடைபெற்ற மணமகள் கண்காட்சியின் உத்தியோகபூர்வ சிகை பராமரிப்பு பங்காளாராக சன்சில்க் இணைந்து கொண்டிருந்தது. 

திருமண ஏற்பாடுகளின் போது மற்ற விடயங்கள் மீது காட்டப்படும் அக்கறை சிகை பராமரிப்புக்கு வழங்கப்படுவதில்லை. உங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாளில் சிகைக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டியதை சுட்டிக்காட்டும் வகையில், சன்சில்க் ஆனது பார்வையாளர்களை விழிப்பூட்டும் நோக்கில் கண்காட்சியுடன் இணைந்து கொண்டதுடன், மணமகள்மாருக்கு அபரிதமான உபசரிப்பையும் வழங்கியிருந்தது. சன்சில்க்கைச் சேர்ந்த ஷேஷாத்ரி பிரியசாத் உள்நாட்டு பிரபலங்களுடன் இணைந்து தொடக்க விழாவினை மிக நேர்த்தியாக வழங்கியிருந்தனர். சன்சில்க் ஹெடகாரி கூடத்திலிருந்த சிகை பராமரிப்பு நிபுணர்களினால் காட்சிக்கூடத்திற்கு வருகை தந்தவர்களுக்கு இலவச சிகை பகுப்பாய்வுகள் மற்றும் சிகை பராமரிப்பு குறித்த விசேட அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு தனிப்பட்ட சிகை ஆலோசனைகள் மற்றும் டிப்ஸ்கள் வழங்கப்பட்டதுடன், காட்சிக்கூடத்திலிருந்த சன்சில்க் ஷம்போ அல்லது கன்டிஷனரை கொள்வனவு செய்தவர்களுக்கு கூந்தலை அலசுதல், வெட்டுதல் அல்லது அலங்காரத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ரமணி பெர்னான்டோ சலூனைச் சேர்ந்த சமந்தா மூலம் ஒவ்வொருவரது முகத்திற்கும் ஏற்ற விதத்தில் கூந்தல் அலங்காரங்களைச் செய்து கொள்ளும் விதம் குறித்து செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் சன்சில்க் மூலம் தமது திருமணநாளன்று ரமணி பெர்னான்டோவினால் தம்மை அலங்கரித்துக் கொள்ளும் வாய்ப்பை பெறும் அதிஷ்டசாலி மணமகளை தேர்ந்தெடுக்கும் குலுக்கல் தெரிவு ஜனவரி 28ஆம் திகதி நடைபெற்றது. மேலும் இக் கண்காட்சியில் Vivaha மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குலுக்கல் தெரிவில் பானதுறையைச் சேர்ந்த அமாலி சந்திரரத்ன வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். தனது முழு திருமணத்திற்கும் 'Vivaha' அனுசரணை வழங்கும் அற்புதமான வாய்ப்பு அமாலிக்கு கிட்டியுள்ளதுடன், சன்சில்க் அனுசரணையுடன் ரமணி பெர்னான்டோ சலூனில் கூந்தல் சிகிச்சைகளை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. மேலும் பங்குபற்றுநர்களின் புகைப்படங்கள் சன்சில்க் பேஸ்புக் பக்கத்தில்; காணப்படுகின்றன.

இந் நிகழ்வு குறித்து யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சிகை பராமரிப்பு பிரிவின் தலைவர் வத்சலா அலுத்கேதர கருத்து தெரிவிக்கையில், 'பெண்கள் அழகிய கூந்தலை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ள ஒரேயொரு வர்த்தகநாமம் சன்சில்க் ஆகும். திருமண ஏற்பாடுகளின் போது இன்றியமையாத பகுதியாக சிகை பராமரிப்பு உள்ளதுடன், உத்தியோகபூர்வ சிகை பராமரிப்பு பங்காளரான சன்சில்க் ஹெடகாரி காட்சிக்கூடத்தின் மூலம் இவ்வனைத்து முக்கிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துவதே குறிக்கோளாகும்' என தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .