2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உள்நாட்டு பாம் ஒயில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 12 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஒயில் பாம் செய்கை என்பது மூன்று தசாப்த காலங்களுக்கு குறுகியிருந்த போதிலும், சர்வதேச ஒயில் பாம் தொழிற்துறைக்கு இலங்கையின் பங்களிப்பு என்பது அண்மையில் மலேசியாவில் இடம்பெற்ற பெருந்தோட்ட முகாமைத்துவ செயலமர்வில் கலாநிதி. டான் சீவரட்னம் சர்வதேச உரை நிகழ்த்துனராக பங்குபற்றியிருந்தார்.

இலங்கையின் ஒயில் பாம் துறையில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகள், வரட்சியான காலநிலையை எதிர்கொள்வது மற்றும் நில நீர் முகாமைத்துவம் தொடர்பில் உரைநிகழ்த்த இவர் அழைக்கப்பட்டிருந்தார்.

பாம் ஒயில் என்பது இந்தோனேசியாவில் மொத்தமாக 4 மில்லியன் ஹெக்டெயர் செய்கையையும், மலேசியாவில் 3 மில்லியன் ஹெக்டெயர் செய்கையையும் மேற்கொள்கிறது. இலங்கையில் மொத்தமாக 7000 ஹெக்டெயரில் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தேசிய மட்டத்தில் பெருமையாகும்.



உள்நாட்டு பாம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வட்டவளை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கை பெருந்தோட்டத்துறையின் நிபுணருமான கலாநிதி. டான் சீவரட்னம் தெரிவித்தார்.

இவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'நான் உற்பத்தி தொடர்பில் மட்டும் அதிகளவு நம்பிக்கை கொள்ளவில்லை, பலன்கள் தொடர்பாகவும் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளேன். இலங்கையில் உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகையில்  95% ஆனவை உயர்ந்த செலவீனத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. பாம் ஒயில் துறையை பொறுத்தமட்டில, இந்த செலவீனம் என்பது பொருளாதார ரீதியில் தேசத்தை கட்டியெழுப்புவதில் எந்தளவு பங்களிப்பை வழங்குகிறது என்பதை பற்றி நாம் ஆராய வேண்டும்' என்றார்.

உள்நாட்டு பாம் ஒயில் தொழிற்துறை என்பது அதிகளவு வாய்ப்புகளை கொண்டமைந்துள்ளது. 'எமது தேவைக்கு தேவையான எண்ணெய் வகையை நாம் உள்நாட்டில் உற்பத்தி செய்வோமாயின், பெருமளவு அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்ள முடிவதுடன், உணவு எண்ணெய் உற்பத்தியை உள்நாட்டிலேயே ஊக்குவிப்பதற்கு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்திருக்கும்' என்றார்ஃ

'பாம் ஒயில் செய்கையின் மூலம் ஒரு ஹெக்டெயருக்கு, வருடமொன்றில் 3000 – 4000 லீற்றர்கள் வரை எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியும். தேங்காய் எண்ணெய் என்பது, ஒரு ஹெக்டெயருக்கு 700 லீற்றர்கள் வரை உற்பத்தி செய்ய முடிகிறது. சூரியகாந்தி எண்ணெய் என்பது ஒரு ஹெக்டெயருக்கு 600 லீற்றர்கள் வரை வருடமொன்றில் உற்பத்தி செய்ய முடிவதுடன், சோயா அவரை எண்ணெய் என்பது, வருடமொன்றில் ஒரு ஹெக்டெயருக்கு 460 லீற்றர்கள் வரை உற்பத்தி செய்யலாம்.

பாம் ஒயில் என்பது உயர்ந்தளவு விளைச்சலை தரக்கூடிய ஒரு செய்கை என்பதுடன், அதிகளவு இலாபத்தையும் வழங்கக்கூடியது. எனவே, நட்டமீட்டிவரும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு, சிறந்த மாற்றுச் செய்கையாக இது அமைந்துள்ளது' என கலாநிதி. டான் சீவரட்னம் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பாம் ஒயில் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க குறைந்தளவு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஒரு ஊழியர் மூலமாக, 10 ஹெக்டெயர் செய்கையை பராமரிக்க முடியும். தேயிலைச் செய்கையை பொறுத்தமட்டில், ஒரு ஹெக்டெயரை பராமரிக்க 2 – 3 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இது போலவே, ஒயில் பாம் செய்கையாளர்கள் 65000 ரூபா முதல் 105000 ரூபா வரை மாதமொன்றுக்கு வருமானமாக பெற முடியும். சராசரி தேயிலை  கொழுந்து பறிப்பவர் ஒருவர் மாதமொன்றுக்கு 25000 ரூபாவையே வருமானமாக பெறுகிறார்.

குறைந்த வளங்களுடன், அதிகளவு விளைச்சல் என்பது உயர்ந்த இலாபத்தை உறுதி செய்வதாக அமைகிறது என கலாநிதி. சீவரட்னம் தெரிவித்தார். கச்சா பாம் எண்ணெய் மூலமாக ஒரு ஹெக்டெயருக்கு 150,000 ரூபா முதல் 200,000 வரை வருமானமாக திரட்டிக் கொள்ள முடியும் என்பதுடன்,  இறப்பர் செய்கையானது இலாபமீட்டுவதற்கு, பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. 

எனவே, இந்த பயிர்ச்செய்கையை இலங்கையில் பரந்தளவில் முன்னெடுப்பதற்கான அனுமதிகயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க முன்வர வேண்டும் எனவும், அதன் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய அனுகூலங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சீவரட்னம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த செய்கை தொடர்பில் எல்பிட்டிய பிளான்டேஷன்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளரான கலாநிதி. ரொஹான் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'தொழிற்துறையில் பல ஆண்டுகள் நிலைத்திருப்பதுடன், மில்லியன் கணக்கான ஹெக்டெயர்களில் பாம் ஒயில் பயிர்ச்செய்கையை முன்னெடுத்திருந்ததன் மூலமாக மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் சிறந்த அந்நிய செலாவணியை பதிவு செய்துள்ளன. இலங்கை இந்த கொள்கையை பின்பற்றுவதன் மூலம் நிச்சயம் பயன்பெறும்' என்றார்.

'ஒயில் பாம் செய்கைக்கான முதலீடு என்பது ஏனைய இறப்பர் மற்றும் தேயிலை போன்ற செய்கைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாக அமைந்துள்ளது' என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார். ஊழியர் பயன்படுத்தல் என்பதும் எனைய செய்கைகளை விட குறைவானதாகவே அமைந்துள்ளது. இந்த செய்கை என்பது பெருந்தோட்டத்திலிருந்து திருடிக் கொள்ள முடியாததாக அமைந்துள்ளது. ஏனைய செய்கைகளான இறப்பர், தேயிலை போன்றன இலகுவில் திருடப்படக்கூடியன.

இறக்குமதிக்கான சிறந்த மாற்றீடாக அமைந்திருப்பது என்பது, இந்த செய்கையை மேலும் விஸ்தரிப்பதற்கான தேவையாகவும் அமைந்துள்ளது என கலாநிதி. பெர்னான்டோ தெரிவித்தார். சர்வதேச சந்தையில் உறுதியான சந்தை வாய்ப்பை கொண்டுள்ள நிலையில், பரந்த நுகர்வோர்களை கொண்டுள்ளமையால் இது பொருத்தமானதாக அமைந்திருக்கும் என்பது அவரின் கருத்தாகும்.

இலங்கை பாம் ஒயில் செய்கைக்கு மாறுவது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும், இதன் மூலமாக இலங்கையை ஏனைய நாடுகளின் நிலைக்கு கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டார்.

ஒயில் பாம் செய்கை என்பது உற்பத்தித் திறன் தொடர்பில் உயர்ந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளது. பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதி வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. பெருந்தோட்ட கம்பனிகள், உள்நாட்டு பாவனையாளர்கள் மற்றும் நாட்டுக்கும் அனுகூலம் வழங்கும் ஒரு செயற்பாடாக அமைந்திருக்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .