2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விஹாரை புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவிய சுவதேஷி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 19 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி மூலிகை பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, கந்தான மூலமாக மற்றுமொரு தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சமூக பொறுப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

புனித தந்தம் வைத்து பாதுகாக்கப்படும் தலதா மாளிகை மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சுவடுகளை பேணப்படும் தம்பதெனி ரஜ மஹா விஹாரை போன்றன சுவதேஷி மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு பழமையை புதுப்பித்துள்ளது. சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சியின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அமரி விஜேவர்தன இந்த புனித தலங்களை மீள மக்கள் வழிபாடுகளுக்காக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

பழம்பொருளியல் திணைக்களத்தின் வழிகாட்டல் மற்றும் கடுமையான மேற்பார்வையின் அடிப்படையில் சுவதேஷி இன்டஸ்ரீஸ் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. நவீன உயர் செலவீனம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சுவடுகள் பேணப்படும் பகுதிகள் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தன. தலதா மாளிகை பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த திருத்த வேலைகள் அசல் கட்டமைப்பில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அமைந்திருந்தது.

பழம்புகழ் பெற்ற தம்பதெனி ரஜமஹா விஹாரை என்பது நாட்டின் மிகவும் மதிப்பை பெற்ற கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக திகழ்கிறது. தலதா பெரஹர என்பதும் முதலில் இங்கு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹா பராக்கிரமபாகு அரசன் இலங்கையை ஆட்சி செய்த இரண்டாவது அரசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவனது காலப்பகுதியில் தம்பதெனியாவில், தம்பதெனி ரஜமஹா விஹாரை நிறுவப்பட்டிருந்தது. 13 வருட காலமாக இந்த பகுதியில் பேணப்பட்டு வந்த புனித தந்தத்தை கௌரவிக்கும் வகையில் தலதா பெரஹர நிகழ்வை வருடாந்தம் அரசன் ஏற்பாடு செய்திருந்தான்.

சுவதேஷி நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக, வரலாற்றுப் பெறுமதி வாய்ந்த வணக்கஸ்த்தலங்களுக்கு ஒளியூட்டுவது அமைந்துள்ளது. 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' என்பது 15 வருடங்களாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறித்து சுவதேஷி நிறுவனத்தின் தலைவரான அமரி குணவர்த்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை நிறுவனம் என்ற வகையில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதன் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்' என்றார்.

'எமது பாரம்பரியம் குறித்து எமது எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் யாத்திரிகர்கள் அனைவரினதும் நலன் கருதி நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வருகிறோம்' என மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஒளியூட்டல் நிகழ்வுக்கு மேலதிகமாக, புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட தம்பதெனிய ஸ்ரீ தலதா மாளிகையை திருமதி. அமரி விஜேவர்தன அவர்கள் திறந்து வைத்திருந்தார். இலங்கை தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் வழிகாட்டலுடன் இந்த மாளிகை புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது.

திருமதி அமரி விஜேவர்த்தன, 1927ஆம் ஆண்டு களனி விஹாரையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்திருந்த ஹெலெனா விஜேவர்த்தன லமாதெனி அவர்களின் பூட்டப்பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. நூற்றுக்கு நூறு வீதம் உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டு தனது தயாரிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கும் பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப்பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், பிளாக் ஈகள் பர்ஃவியும், லேடி மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான 'லிட்டில் ப்ரின்சஸ்' ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .