2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அல்-மனார் சிற்றி கெம்பஸின் முதலாவது கிளை

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் தனி ஒரு பிரிவாக வாழ்க்கைக்கு தொழில், தொழிலுக்கு செய்திறன் எனும் தொனியில் பல்வேறு கணினி தொழிற் பயிற்சி நெறிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிற்றி கெம்பஸின் முதலாவது கிளை நேற்று (2) காத்தான்குடி முதலாம் குறிச்சி, காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பணிப்பாளர் எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சமூக சேவையாளர் கலாநிதி எம்.பஹ்மி இஸ்மாயில் ஆகியோர் சிற்றி கெம்பஸை திறந்து வைத்ததுடன் கெம்பஸின் பெயர் பலகையும் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், மட்டு, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும் காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும் மரண விசாரணை அதிகாரியுமான சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன், காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுபைர், இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பி.எம்.எம்.மர்சூக், முன்னணியின் பிரதித் தலைவர் எம்.ஏ.ஜாபிர், அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் மும்தாஸ் (மதனி), சிற்றி கெம்பஸின் பணிப்பாளர் எம்.நவ்ஸாத் உட்பட பிரமுகர்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சிற்றி கெம்பஸை காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியும் காத்தான்குடி அல்-மனார் நிறுவனமும் இணைந்து இளைஞர் முன்னணியின் கட்டிடத்தில் பாடநெறிகளை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .