2026 மே 07, வியாழக்கிழமை

dd

இல்லங்கள் தோறும் சேமிப்பு திட்டம்

Kogilavani   / 2014 ஜூன் 12 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள  இல்லங்கள் தோறும் சேமிப்பு  எனும் திட்டத்தின் கீழ் 25 சிறுவர்களுக்கு தலா 1000 ரூபா வீதம் மக்கள் வங்கிக் கிளையில் வைப்பிலிடப்பட்ட சேமிப்பு புத்தகம் பெற்றோர்களிடம் புதன்கிழமை (11) கையளிக்கப்பட்டது.

முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே கடந்த 2014ஆம் ஆண்டு முனைக்காட்டில் பிறந்த 25 சிறுவர்களுக்கான சேமிப்பு புத்தகம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

ஆலய பரிபாலனசபை, கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன், கோட்டக்;கல்வி அதிகாரி ந.தயாசீலன், கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர் மா.இளங்கோ உட்பட பல்வேறு பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் முனைக்காட்டைச்சேர்ந்த தாந்தியான் வேதநாயகம் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
பிள்ளைகளின் எதர்கால கல்வியினை கருத்தில்கொண்டும் பெற்றோர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் நோக்கிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில்  1350இற்கு மேற்பட்ட குடும்பங்களையும் 4 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய முனைக்காட்டுக் கிராமத்தில் 2014 முதல் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் சேமிப்புக்கணக்கு திறந்து ஒரு தொகைப் பணம் வைப்பிடலப்படும்.

இதற்கான சேமிப்பு புத்தகம் பெற்றோரிடம் கையளிக்கப்படும். 

மட்டக்களப்பு  மாவட்டத்தில் முனைக்காட்டுக் கிராமத்திலேயே இத்திட்டம் முதன்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச்சேமிப்;புக் கணக்கில் கூடுதலான தொகையினை பிள்ளைகளின் பெயரில் சேமிக்கும் பெற்றோருக்கு  ஊக்குவிப்பாக ஒரு தொகைப் பணம் வைப்பிலடப்படும்  என தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .