2026 மே 07, வியாழக்கிழமை

dd

பங்கு முகவர் வர்த்தக அனுமதிப் பத்திரத்தை பெற முனையும் டிஸ்டிலரீஸ்

A.P.Mathan   / 2014 ஜூன் 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்கு முகவர் நிறுவனங்கள் பெருமளவு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையை தொடர்ந்து பெருமளவான இலங்கை நிறுவனங்கள் பங்கு முகவர் அனுமதிப் பத்திரத்தை பெற முயற்சி செய்வதாக அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

இதன் ஓர் அங்கமாக பங்கு முகவர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உயர் நிகர பெறுமதி வாய்ந்த நபருடன் பேச்சுவார்த்தையில் டிஸ்டிலரீஸ் கம்பனி ஈடுபட்டுள்ளது.

இந்த நபர் ஏனைய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள போதிலும், ஹரி ஜயவர்த்தனவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டிஸ்டிலரீஸ் நிறுவனம் தனது நிதித்துறைசார் வர்த்தக செயற்பாடுகளை பரிபூரணமாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த செயற்பாட்டிலும் ஈடுபடும் என அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்தம் நிறைவடைந்தவுடன் பங்குச் சந்தையில் காணப்பட்ட உயர்ந்த போக்கின் காரணமாக, பெருமளவான பங்கு முகவர் நிறுவனங்கள் தமக்குரிய அனுமதிப்பத்திரங்களை சகாய அடிப்படையில் பெற்று அதிகளவு இலாபமீட்டியிருந்தன. ஆயினும் காலப்போக்கில் போதியளவு வருமானமின்மை காரணமாக, தற்போது தமது அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்வது குறித்து கவனம் செலுத்துகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .