2026 மே 07, வியாழக்கிழமை

dd

பியர் வியாபாரத்திலிருந்து வெளியேறும் கார்கில்ஸ்

A.P.Mathan   / 2014 ஜூன் 16 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்கில்ஸ் நிறுவனம் பியர் வியாபாரத்திலிருந்து வெளியேறுவது குறித்து கலந்தாலோசித்து வருவதாக பங்குச்சந்தை வட்டாரங்களின் மூலம் அறியவந்திருந்தது.

த்ரீ கொய்ன்ஸ் பியர் எனும் நாமத்தின் கீழ் மில்லர்ஸ் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் பியர் வியாபாரத்தை சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் 1.43 பில்லியன் ரூபாவுக்கு கார்கில்ஸ் கொள்வனவு செய்திருந்தது. மில்லர்ஸ் நிறுவனம், கார்கில்ஸ் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் மூலம் த்ரீ கொய்ன்ஸ், சான்டோ ஸ்டௌட், 3 கொய்ன்ஸ் ரீவா, ஐரிஷ் டார்க் மற்றும் கிரான்ட் புளொன்ட் பிரான்ட் போன்றன விற்பனை செய்யப்படுகின்றன.
தனது பிரதானமல்லாத வர்த்தக செயற்பாடுகளிலிருந்து வெளியேறுவது தொடர்பில் கார்கில்ஸ் கவனம் செலுத்தி வருவதாக அறிய முடிந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .