2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதி அதிகரிப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வியாபார வித்தியாசம் என்பது நடப்பு ஆண்டில் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்ததன் விளைவாக இந்த பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2014ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 16.8 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இதேவேளை, இறக்குமதிகள் 1.2 சதவீதத்தால் சரிவடைந்திருந்தன.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடை உற்பத்திகளுக்கு அதிகளவு கேள்வி காணப்படுகின்றமையால் ஏற்றுமதி பெறுமதி அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X