2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பொதுஹெர முதல் கலகெதர மற்றும் கலேவெல வரையிலான இணைப்பு பகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
 
கம்பஹா, வெயாங்கொட, மீரிகம, குருநாகல், ரிதீகம, மெல்சிரிபுர மற்றும் கலேவெல ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இது அமையவுள்ளதுடன், ரம்புக்கனை மற்றும் கலகெதர ஆகிய பிரதான நகரங்களை இணைக்கும் வகையிலும் அமைந்திருக்கும். வடக்கு நெடுஞ்சாலை நிர்மாணத்தின்போது இடை மாறும் பகுதிகள் என்டேரமுல்ல, கம்பஹா, வெயாங்கொட, மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல், ரிதீகம, மெல்சிரிபுர, கலேவெல மற்றும் பொத்துஹெர ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
 
வீதி அமைப்பு மதிப்பீடு மற்றும் ஆரம்பகட்ட வடிவமைப்புகள் போன்றன பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வீதி அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு மற்றும் சூழல் பாதிப்பு மதிப்பீடு போன்றன மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X