2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தன்னியக்க பண பரிமாற்று இயந்திரம் திறந்து வைப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

பாசிக்குடாவுக்கு  வருகை தரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப்பிரயாணிகளின் நன்மை கருதி முதன் முதலாக ஹட்டன் நெசனல் வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் (ஏ.ரி.எம்.) பாசி வே ஹோட்டலில் திங்கட்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

பாசி வே ஹோட்டல் முகாமைத்துவப் பணிப்பாளர் ஈஃவி. குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹட்டன் நெசனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரிமல் பெரேரா தன்னியக்க இயந்நிரத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில்,

'இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தும் நோக்கோடு பாசிக்குடாவுக்கு  வரும் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளின் வசதி கருதியே திறக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் வங்கித் தேவைகளுக்கு 6 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள வாழைச்சேனை நகரத்துக்குச்; சென்று உல்லாசப் பிரயாணிகள் உட்பட வாடிக்கையாளர்கள்  வங்கிக் கருமங்களில் ஈடுபட்டனர். இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் உள்ள  ரெலர் மெசினில் உலகளாவிய ரீதியில் உள்ள வீசா அட்டைகளை செயற்படுத்த முடியும்' எனக் கூறினார்.

உதவிப் பொது முகாமையாளர் ( வலையமைப்பு முகாமைத்துவம்) றோகான் தம்பிராஜா, கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் ஜெகராஜா, வாழைச்சேனை வங்கி முகாமையாளர் ரெஜினோல் பீற்றர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X