2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிங்கருடன் கைகோர்த்துள்ள அமானா வங்கி

A.P.Mathan   / 2014 நவம்பர் 11 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் வட்டி சாராத வங்கித் துறையில் முன்னோடியாகத் திகழும் அமானா வங்கி இலகு கொடுப்பனவு திட்டத்தின் மூலம் சௌகரியமாக கொள்முதல் செய்வதற்கு உதவியளிக்கும் வகையில் இலத்திரணியல் உபகரணங்களின் முதன்மையாளராக திகழும் சிங்கருடன் கைகோர்த்துள்ளது. இந்த நிதித்திட்டத்;தின் ஊடாக, வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான இலத்திரணியல் உபகரணங்கள், தனிப்பட்ட பாவனைப் பொருட்கள்;, வீட்டு உபகரணங்கள்;, தளபாடங்கள் மற்றும் பல பொருட்களை எந்தவொரு சிங்கர், சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ், சிங்கர் ஹோம் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியரைகளிலும், நாடுபூராகவும் உள்ள விற்பனை முகவர்களிடமும் கொள்வனவு செய்யலாம். அமானா வங்கி இதற்காக 25,000 ரூபா முதல் 300,000 ரூபா வரையும் உயர்ந்தபட்ச கால எல்லையாக 3 வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்தக்கூடியவாறு நிதியுதவியையும் வழங்கும். இதற்கு எந்த பிணையாளிகளும் அவசியமில்லை. அரச நிறுவனங்கள்;, பங்குச்சந்தையில் பட்டியல்படுத்தப்பட்ட அரச கம்பனிகள் மற்றும் முன் அங்கீகரிக்கபட்ட கம்பனிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகின்றது. 
 
இந்த இருதரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் சிங்கர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. 
 
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் ' இந்த பிரத்தியேக நிதியுதவித் திட்டத்தை வழங்குவதற்காக உள்நாட்டில் பெயர்பதித்த புகழ்மிக்க சிங்கர் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்திருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்தக் கூட்டு முயற்சியின் ஊடாக சிங்கர் உற்பத்திகளை மிகவும் சௌகரியமான, கட்டுப்படியான விலையில் கொள்வனவு செய்ய வைப்பதற்கு நாம் எதிர்பாக்கின்றோம். குறிப்பாக, இளம் நிறைவேற்று அதிகாரிகள் ஸ்மார்ட் போன் அல்லது மடிக்கணணியையும், அதேபோல் சிரேஷ;ட முகாமையாளர்கள் குளிரூட்டி அல்லது ஒரு ஸ்மார்ட் டீ.வி போன்ற பொருட்களை இதன் மூலம் கொள்வனவு செய்ய வைப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றார். 
 
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட சிங்கர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அசோக்க பீரிஸ் ' இந்த நிதியுதவித் திட்டத்தில் அமானா வங்கியுடன் கைகோர்த்ததையிட்டு சிங்கர் பெருமைப்படுகின்றது. எமது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த கூட்டு முயற்சியின் மூலம் நன்மையடையலாம் என்றும் இது வாடிக்கையாளர்களுக்கு தமது வாழ்க்கை தரத்தை விருத்தி செய்து கொள்வதற்கு சந்தர்ப்பமளிக்கும் என்றும் நாம் கருதுகின்றோம். எம்முடன் சேர்ந்து இந்த சௌகரியமான கொடுப்பனவு திட்டத்தை அறிமுகப்படுத்தியமைக்காக நான் அமானா வங்கிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றார். 
 
வட்டி சாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியே அமானா வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு,  நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. 
 
400 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களையும், 150 இற்கும் மேற்பட்ட சேவை நிலையங்களையும் கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட சிங்கர் ஸ்ரீலங்கா தனியார்க் கம்பனி நாட்டில் நுகர்வோர் நிலைப்பொருட்களை சில்லறையாக விற்பனை செய்து வரும் மிகப் பெரிய நிறுவனமாகும். அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய நிறுவனமாக இருந்து வரும் இந்தக் கம்பனி நாட்டின் மிகச் சிறந்த பிரஜைகளுக்கான நிறுவனங்களில் ஒன்று என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, இது போன்ற பல விருதுகளை வர்த்தக சமூகத்திடம் இருந்து வென்றுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X