2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கோல்ஃபேஸ் டெரஸ் பகுதியில் ரேணுகா டவர்

A.P.Mathan   / 2014 நவம்பர் 12 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரேணுகா ஹோல்டிங்ஸ் பிஎல்சி கோல்ஃபேஸ் டெரஸ் 3.2 பில்லியன் ரூபா பெறுமதியில் 28 மாடிகளைக் கொண்ட ரேணுகா டவர் கட்டடத்தை நிர்மாணிக்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
 
இந்த கட்டிடம் 200,000 சதுர அடிகளில் வாடகை அலுவலகங்களையும், 200க்கும் அதிகமான கார்களை தரித்து வைத்திருக்கக்கூடிய வசதிகளையும் கொண்டமையவுள்ளது. 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம், 2018இல் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை கம்பனியின் பங்குதாரர்கள் வழங்கியுள்ளனர்.
 
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் ரேணுகா ஹோல்டிங்ஸ் 3.85 பில்லியன் ரூபாவை புரள்வு பெறுமதியாக பதிவு செய்துள்ளதுடன், 899.5 மில்லியன் ரூபாவை நிகர இலாபமாக பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 21 வீத அதிகரிப்பாகும்.
 
2014 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் கம்பனி 5.3 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X