2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு - மும்பை இடையிலான இரண்டாவது விமான சேவையை ஆரம்பித்துள்ள ஜெட் எயார்வேய்ஸ்

A.P.Mathan   / 2014 நவம்பர் 12 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் முன்னணி சர்வதேச விமான சேவை வழங்குநரான ஜெட் எயார்வேய்ஸ், கொழும்பு – மும்பை இடையிலான இரண்டாவது விமான சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதிகளவான கோரிக்கையை தொடர்ந்து, நவம்பர் 5ஆம் திகதியிலிருந்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மும்பை நகருக்கும் தூர கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் கல்ஃவ் நாடுகளுக்கு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போயிங் 737 விமானத்தின் மூலம், ஜெட் எயார்வேய்ஸ் வாடிக்கையாளர்கள் தற்போது, ஒரே நாளில் கொழும்பு – மும்பை நகருக்கிடையில் தமது பயணத்தை மேற்கொள்ளலாம். குறிப்பாக வியாபார நோக்கில் பயணிப்பவர்களுக்கு இந்த சேவை பெரிதும் அனுகூலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. வாரத்தின் ஏழுநாட்களிலும் இந்த சேவையை பயணிகள் பெற்றுக் கொள்ள முடியும்.
 
ஜெட் எயார்வேய்ஸ் விமான இலக்கம் 9W 251, கொழும்பிலிருந்து தனது பயணத்தை 2135 மணிக்கு ஆரம்பித்து, மும்பை விமான நிலையத்தை 0015 மணிக்கு சென்றடையும். மீண்டும் மும்பையிலிருந்து 1805 மணிக்கு புறப்படும் இந்த விமானம் கொழும்பை 2035 மணிக்கு வந்தடையும். 
 
இந்த மாலைநேர விமான சேவை என்பது, ஜெட் எயார்வேய்ஸ் கொழும்பிலிருந்து மும்பை நகருக்கு இயக்கும் அதிகாலை நேர விமான சேவைக்கு மேலதிகமானதாக அமைந்துள்ளது. இதன் மூலம் நாளொன்றில் இரு விமான சேவைகளை இந்தியாவுக்கு ஜெட் எயார்வேய்ஸ் முன்னெடுக்கிறது.
 
இந்த புதிய விமான சேவையின் மூலமாக, கொழும்பிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு, மும்பை விமான நிலையத்திலிருந்து துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களுக்கும், பாங்கொக், சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் போன்றன தூர கிழக்கு நாடுகளுக்கும், வட அமெரிக்கா, பாரிஸ் மற்றும் லண்டன் ஹீத்ரு போன்ற விமான நிலையங்களுக்கும் நேரடி மற்றும் இணைப்பு விமான சேவைகளை அனுபவிக்க முடியும். 
 
ஜெட் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிறீமர் பெல் கருத்து தெரிவிக்கையில், 'ஜெட் எயார்வேய்ஸ் என்பது இந்த மாலை நேர விமான சேவையை அறிமுகம் செய்வதையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறது. இந்த நகரங்களுக்கிடையிலான பயணிகளின் கோரிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, இந்த கோரிக்கையை நிவர்த்தி செய்யும் வகையில், .இந்த புதிய சேவை அறிமுகம் அமைந்துள்ளது. இந்த விமான சேவையின் அறிமுகத்தின் மூலம் தூர கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கல்ஃவ் பிராந்திய நாடுகளுக்கு மும்பையிலிருந்து பயணங்களை மேற்கொள்ள முடியும். இந்த நேரடி சேவையின் அறிமுகத்தின் மூலம் எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெரிதும் வரவேற்பை பெறும் வகையில் அமைந்திருக்கும்' என்றார்.
 
இந்த விமான சேவையானது, உயர் தரம் வாய்ந்த மற்றும் சிக்கனமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. விருதை வென்ற விமான சேவை அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஜெட் எயார்வேய்ஸ் வழங்கி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X