
சிங்கப்பூரின் மாபெரும் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையர்களுக்கு அங்கு பெருமளவு தொழில் வாய்ப்புகள் காணப்படுவதாக அமாகி இன்டர்நஷனல் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி.கே.சிறிமத் தெரிவித்தார்.
வெளிநாடொன்றில் ஆளுமை படைத்த இலங்கையர் ஒருவருக்கு தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
'சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் வியாபார துறை என்பது இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் தயக்கம் காண்பித்திருந்தன. தற்போது இலங்கை தொடர்பில் அவர்கள் நேர்த்தியான அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அமாகி இன்டர்நஷனல் உடன் தொடர்பு கொண்டு, சிங்கப்பூர் துறைமுகத்தில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் பற்றி அறிவித்திருந்தது. இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பொறுப்பு வாய்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் எனும் வகையில் சிங்கப்பூர் அதிகாரிகளுடன் இது தொடர்பில் நாம் நீண்ட உரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். சிங்கப்பூர் துறைமுகத்தில் இலங்கையர்களுக்கு வௌ;வேறு நிலைகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம். விரைவில் Lashing workers மற்றும் Container drivers போன்ற நிலைகளுக்கு இலங்கையர்கள் விண்ணப்பிக்க முடியும். சகல தொழில்களும் சிங்கப்பூர் துறைமுக பகுதியை அண்டிய பிரதேசத்தில் அமைந்திருக்கும்' என பி.கே.சிறிமத் மேலும் தெரிவித்தார்.
இவரின் கருத்துக்கமைவாக, இலங்கையை சேர்ந்தவர்களுக்கு சிங்கப்பூர் துறைமுகத்தில் மாதமொன்றில் 105,000 – 136,500 ரூபாவை வருமானமாக பெற்றுக் கொள்ள முடியும்.
இரண்டு வருட ஒப்பந்த கால அடிப்படையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், தங்குமிடம், காப்புறுதி, மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றன ஏற்படுத்தித் தரப்படும்.
அமாகி இன்டர்நஷனல் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சந்திரகுமார லொகுலியன கருத்து தெரிவிக்கையில், 'சிங்கப்பூர் துறைமுக அதிகார சபையிலிருந்து விசேட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து, உள்நாட்டு விண்ணப்பதாரிகளை நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தும். தற்போது இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நிலவும் ஊழியர் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக சகல தொழில்களும் வழங்கப்படும்' என்றார். விண்ணப்பதாரிகள் 2856@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி மற்றும் 0114333111, 077 5456440 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.