
வத்தளையில் அமைந்துள்ள பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் (Pegasus Reef Hotel) எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள விரிவான திட்டங்கள் தொடர்பில் அறிவித்துள்ளது. அதிதிகள், நலன் விரும்பிகள் கலந்து கொள்ளும் பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் நிறுவனத்தின் வருடாந்த Mixing of the Christmas Cake Ceremony நிகழ்வுடன் ஒருங்கிசைந்ததாக இத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
ஹோட்டல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆளுமையும் பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் பணிப்பாளருமான திரு. பெடி விதான அவர்கள் கூறுகையில், 'இலங்கையின் இப்பகுதியில் கிறிஸ்மஸ் ஆனது மிகவும் பிரபல்யமானதும் அதிகமானோரால் கொண்டாடப்படும் பண்டிகையாகவும் திகழ்கின்றது. எனவேதான், இதற்கு முன்னர் இல்லாதவாறு இவ்வருடத்தின் பண்டிகைக் காலத்தை மிகச் சிறப்பாக மாற்றியமைக்கும் விதத்தில் பிரமாண்டமான மற்றும் விரிவான திட்டங்களை வகுத்துள்ளோம்' என்றார்.
டிசம்பர் மாதம் உதயமாகின்ற போது பண்டிகைக் காலம் பற்றிய முன்னுணர்வு பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் முழுவதும் வியாபித்திருக்கும். அதேவேளை, டிசம்பர் 20ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் முழுமூச்சில் அது இடம்பெறும். அன்றைய தினம் ‘X’mas Goodies Hut’ குடிசை தனது கதவுகளை திறக்கும். கிறிஸ்மஸ் தொடர்பான தனித்துவமான நறுமணத்தை பரப்புகின்ற இந்த குடிசையானது பல்வேறுபட்ட கிறிஸ்மஸ் பொருட்களை தன்னகத்தே கொண்டிருக்கும். அவற்றுள் கேக், யுல் லொக், பிரேதர், ரோஸ்ட் டேர்க்கி, கிறிஸ்மஸ் குக்கீஸ் போன்ற மேலும் பல பண்டங்களும் உள்ளடங்கும்.
24ஆம் திகதி ஹோட்டலின் லோங்ச் பார் பிரிவில் கரோல் கீத நிகழ்ச்சி இடம்பெறுவதுடன் அதனைத் தொடர்ந்து, கிறிஸ்மஸிற்கு முன்னைய நாள் இரவுநேர விருந்துபசாரம் (Christmas Eve Dinner) பிரதான உணவகத்தில் இடம்பெறும். டிசம்பர் 25ஆம் திகதி நிகழ்வுகளின் முக்கிய சிறப்பம்சங்களாக – பிரதான உணவகத்தில் இடம்பெறும் Christmas Lunch Buffet மற்றும் அன்றிரவு வேளையில் சமையற் கலைஞரால் கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட மேசையில் பரிமாறப்படும் Beach Dining விருந்துபசாரம் போன்றவை காணப்படுகின்றன.
லோங்ச் பார்ரில் இடம்பெறுகின்ற பிரியாவிடை மதுபான உபசார நிகழ்வு, அதனைத் தொடர்ந்து ரஜிவ் மற்றும் கிளான் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் புதுவருடத்திற்கு முந்திய நாள் இரவுணவு உபசார நடனம் ஆகியவற்றுடன் பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது 2014ஆம் ஆண்டினை வழியனுப்பி வைக்கவுள்ளது. 'பெகஸஸ் குயின்' இற்கு முடிசூட்டுதல் மற்றும் நள்ளிரவில் இடம்பெறும் கண்ணைக்கவரும் வானவேடிக்கை என்பவை அன்றைய தினம் இரவு இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வுகளாக காணப்படும்.
அதிலிருந்து சில மணித்தியாலங்களுக்குப் பிறகு, அதாவது 2015 ஜனவரி 01ஆம் திகதி பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது, சம்பிரதாயபூர்வ குத்துவிளக்கு ஏற்;றுதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பிரபலங்களுக்கான சிற்றுண்டி உபசாரம் ஆகியவற்றுடன் தன்னுடைய தொழிற்பாடுகளை சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கும்.
திரு. பெடி விதான ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'தனது புதிய சேவை வழங்கலான – கடற்கரையில் அமைக்கப்பட்ட கடலுணவு உணவகம் மற்றும் மதுபானசாலையின் நிர்மாணப் பணிகளை எமது ஹோட்டல் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதன்மூலம் இங்கு வரும் அதிதிகள் தமது விருப்பத்திற்குரியதை தெரிவு செய்து, அங்கேயே சமைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த உணவகமானது கூடாரத்தின் கீழ் 60 இருக்கை தொகுதிகளையும் (PAX) திறந்த வெளியில் 40 இருக்கை தொகுதிகளையும் கொண்டதாக இருக்கும். அதன்படி மொத்தமாக 100 உணவருந்துவோர் உட்கார முடியும். இந்த உணவகம் ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து தொழிற்பட ஆரம்பிக்கும்' என்றார்.
ஹோட்டலின் முகப்புக் கூடத்தை (Lobby) முற்றுமுழுதாக புதுப்பொலிவூட்டுவதற்கான திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தரையிடல், புதிய தளபாடம் மற்றும் பொருத்துக்கள் அமைத்தல், புதிய ஒளியூட்டல், புதிய வரவேற்பு கருமபீடம் அமைத்தல் போன்றவை இதில் உள்ளடங்குகின்றன. முகப்புக்கூட மதுபான மையமும் புதிய வடிவமைப்பு மற்றும் தளபாடங்களை கொண்டதாக மாற்றியமைக்கப்படவுள்ளதுடன், திறந்த வெளிப்பரப்பு நோக்கி விஸ்தரிக்கப்பட இருக்கின்றது. எனவே அதிதிகள் தாம் அருந்தும் பானத்தை அனுபவித்து மகிழ முடிவதுடன் மறக்க முடியாத மாலைப் பொழுதையும் இங்கே கழிக்க முடியும். ஏககாலத்தில் கார் தரிப்பிடமும் 'மூன்று-அடுக்கு' தள முறையுடன் 'பூங்கா கார் தரிப்பிடமாக' மாற்றியமைக்கப்படவுள்ளது. தற்போது காணப்படுகின்ற முகப்புவாயில் கார் தரிப்பிடம் வரை விஸ்தரிக்கப்படும் என்பதால் சென்றடைவதற்கு இலகுவாக அமையும்.
கொழும்பு வடக்குக்; கடற்கரையோரமாகவும் அதேநேரம் துறைமுகத்தை அங்கிருந்து பார்க்கும் வகையிலும் அமையப் பெற்றிருக்கின்ற பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் என்பது, அழகிய, மன அமைதிக்கான இடமாகவும் அதேபோன்று சூரியன் முத்தமிடுகின்ற இலங்கையின் ரம்மியமான கடற்கரையோரமாகவும் காணப்படுகின்றது. கொழும்பு நகரில் இருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது, கொழும்பு தலைநகர் பகுதி மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பவற்றுக்கு இடைப்பட்ட ஹெந்தல - வத்தளை பிரதேசத்தில் உபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம், எதிலும் இரண்டாம் தரமில்லாத சௌகரிய தெரிவுகளை இது தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.