2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

லோட்டஸ் வேர்ள்ட்டின் செயற்பாடுகள்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 23 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோட்டஸ் வேர்ள்ட்டின் சர்வதேச தாபிப்பைத் தொடர்ந்து இந்த அமைப்புக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து, இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் தமது எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான அறிவித்தல்களை வெளிப்படுத்தியுள்ளனர். 

இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், லோட்டஸ் வேர்ள்ட்டின் பேச்சாளர் நவின் குணரட்ன மற்றும் ககன் மலிக் ஆகியோர் இலங்கையில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பிலும், அது எவ்வாறு உலகின் சகலருக்கும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

நவின் குணரட்ன மற்றும் ககன் மலிக் ஆகியோரால் இணைந்து அறிவிக்கப்பட்டிருந்த இந்த செயற்திட்டத்தின் மூலமாக, அதிகளவு தேவையை எதிர்பார்ப்பவர்களுக்கு தமது தேவைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், அதன் மூலம் அக மகிழ்ச்சியை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. 

லோட்டஸ் வேர்ள்ட் உடன் இணைந்து நாரத மையம் மற்றும் சங்கைக்குரிய கொலன்னாவே நாரத தேரர் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பரந்த சமய நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய புத்தகங்களை விநியோகிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நோக்கம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சிறந்த ஒழுக்க முறையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.  

'ஸ்ரீ சித்தார்த்த கௌதம' எனும் திரைப்படத்தை காண்பிக்கவுள்ளனர். நட்சத்திர நடிகர் ககன் மலிக் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். 

கொழும்பு, கம்பஹா, குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய முக்கிய மாவட்டங்களில் இந்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதானமாக குழந்தைகளை இலக்காக கொண்டு இந்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

லோட்டஸ் வேர்ள்ட்டின்; சர்வதேச தாபக நிகழ்வு அண்மையில் சர்வதேச உறவுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் கல்வியகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் லுஆங் ராஜதாரஸ்ரீ ஜயன்குர பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் சில முன்னணி சமய பிரமுகர்களும் பங்குபற்றியிருந்தனர். அறிமுக உரையை மஹாத்மா காந்தி நிலையத்தின் தலைவர் கலாநிதி. மொஹமட் சலீம் வழங்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X