2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அக்கறை செலுத்தும் சன்ஷைன் ஹெல்த்கெயார்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐந்து தசாப்த காலமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சன்ஷைன் ஹெல்த்கெயார், இலங்கையர்கள் மத்தியில் சிறந்த சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறது. சகல துறைசார் அமைப்புகளுடனும் இணைந்து செயலாற்றும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ், உயர் தரம் வாய்ந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார பராமரிப்பு செயற்பாடுகளை வழங்கி, அதன் மூலம் உறுதியான மற்றும் ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 

சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான பேர்னாட் ஜோசப் கருத்து தெரிவிக்கையில், 'உயர் தரம் வாய்ந்த மருந்துப்பொருட்களை சகாய விலையில், எமது பங்காளர்களின் மூலமாக மக்களுக்கு விநியோகிப்பதன் மூலமாக, நாம் இலங்கையில் அதிகளவு நேசிக்கப்படும் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயலாற்றி வருகிறோம்' என்றார்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ், வாடிக்கையாளர்களுடன் கைகோர்த்துள்ளதன் மூலமாக தனது நீண்ட கால செயற்பாட்டை முன்னெடுக்க முடிந்துள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. மாற்றமடைந்து வரும் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பில், முன்னிலையில் திகழ்வதன் மூலம் சுகாதார பராமரிப்பு பிரிவில் ஒன்றிணைக்கப்பட்ட செயற்பாட்டை கம்பனி முன்னெடுத்து வருகிறது. 

சுகாதார பராமரிப்பு துறையில் நிறுவனத்தின் நிலையான பங்களிப்பு தொடர்பில் ஜோசப் கருத்து தெரிவிக்கையில், 'கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் வௌ;வேறு பங்காளர்களுடன் கைகோர்த்து செயலாற்றி வருகிறோம். இலங்கையின் நோயாளர்கள் சிறந்த இன்சுலினை (மனித இன்சுலின்) பெற்றுள்ளனர். நாம் தற்போது இன்சுலின் அனலொக்களை வழங்கி வருகிறோம். இவை உலகில் காணப்படும் தலைசிறந்த இன்சுலின் வகைகளாக திகழ்கின்றன. உலகின் வௌ;வேறு பகுதிகளில் காணப்படும் நோயாளர்களை போலவே, இலங்கையை சேர்ந்த நோயாளர்களும் சிறந்த அனலொக் இன்சுலின் வகையை பெற்றுக் கொள்ளலாம்' என்றார். 

நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தொற்றா நோயான நீரிழிவை தடுப்பது மற்றும் அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் தமது நிறுவனம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'இது ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளதுடன், குடும்பங்களுக்கும் பெரும் சுமையாக அமைந்துள்ளது. அத்துடன், சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவோருக்கும் பெரும் சிக்கலான விடயமாக அமைந்துள்ளது' என்றார். 

இந்த கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய நோயின் மோசமான நிலையானது, அண்மையில் உள்நாட்டைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய சிறுவன் ஒருவனுக்கும் இரண்டாம் நிலை நீரிழிவு நோய் ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டிருந்ததன் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது. வயது வந்த நீரிழிவு நிலை எனவும் இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

நீரிழிவு தொடர்பில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அர்ப்பணிப்புடன் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 'சுகாதார பராமரிப்பு நிபுணர்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலம், நாம் சிறியளவிலான சந்திப்புகள் பலதை நாடு முழுவதும் முன்னெடுத்துள்ளோம். நோயாளர் விழிப்புணர்வு நிகழ்வுகள், முகாம்கள் மற்றும் தாதியர்கள் பயிற்சி நிகழ்வுகள் போன்றவற்றையும் நாம் பொது மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுவரையில் முன்னெடுத்துள்ளோம்' என்றார். 

முகாம்கள் என்பது எமது திட்டத்தின் ஒரு அங்கமாகும். நாம் பல மருத்துவ விழிப்புணர்வு செயற்பாடுகளை வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார பராமரிப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கியுள்ளோம். இது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு செயற்பாடாகும், நாம் தொடர்ந்தும் இதை மேற்கொள்வோம்' என ஜோசப் மேலும் குறிப்பிட்டார்.  

சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துப்பொருட்கள் துறையின் மதிப்பை பெற்ற பேச்சாளர் எனும் வகையில், நீரிழிவை கட்டுப்படுத்துவது தொடர்பில் செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜோசப் தொடர்ந்து வலியுறுத்துகையில், 'வாழ்க்கைத்தரம், உணவு பழக்க வழக்க முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம், உடற்பயிற்சி முறை, நாளாந்தம் 30 – 45 நிமிடங்கள் வரை நடப்பது' போன்றன இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான முறைகளாக அமைந்துள்ளது' என்றார். 
பொறுப்பு வாய்ந்த ஊழியர் எனும் வகையில், எமது நிறுவனம் அண்மையில் 'சீனி இல்லாத தினம்' ஒன்றை நிறுவனத்தின் சகல பிரிவுகளிலும் பிரகடனம் செய்திருந்தது. 2014 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. சகல ஊழியர்களுக்கும் நோயின் தன்மை தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், இலவச நோய் கண்டறிதல் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் தமது சுகாதாரம் பற்றி கவனம் செலுத்துமாறு ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை நீரிழிவு சங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலமாகவும், ஊடகங்களின் உதவியுடனும், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நீரிழிவு கட்டுப்படுத்தல் தொடர்பில் மேலும் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. 

புதிய மருத்துவ பிரிவுகளில் தனது கவனத்தை செலுத்தி வரும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், உயிரியல் பிரிவுகள், புதிய மருந்து விநியோக கட்டமைப்புகள், பெண் சுகாதார பராமரிப்பு சேவைகள் உள்ளடங்கலான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம், இந்த பிரிவுகளைச் சேர்ந்த மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்து குழந்தையில்லாத தம்பதிகளுக்கு சிகிச்சைகளை வழங்கும் வைத்தியர்களுக்கு பங்களிப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. 'பாரியளவு நிறுவனங்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், இலங்கைக்கு சகாய விலையில் புற்றுநோய் சிகிச்சை மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்' என ஜோசப் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் நீரிழிவு தொடர்பான மருந்துப்பொருட்கள் மற்றும் சாதனங்களை இறக்குமதி செய்வதில் சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனம் முன்னணியில் திகழ்கிறது. தனது 100 சதவீதம் அங்கத்துவத்தை பெற்ற ஹெல்தகார்ட் பார்மசி ஊடாக சகாயமான விலையில், பல்வேறு மருந்துப்பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X