2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முதலீட்டு திரும்பல்களுக்கு உத்தரவாதமளிக்கும் சதாஹரித

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


வனவியல் முதலீடுகளில் சந்தை முன்னோடியாக திகழும் சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம் முதலீட்டு திரும்பல்களை உறுதியளிக்கும் வகையில் Wescorp அவுஸ்திரேலியா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. உலகில் மிகப்பெரிய சந்தன எண்ணெய் விநியோகிப்பாளராக Wescorp அவுஸ்திரேலியா திகழ்வதுடன், தற்போது உலகின் மிகப்பெரிய அகர்வுட் எண்ணெய் வழங்குநராகுவதற்காக சதாஹரித பிளாண்டேஷன் ஊடாக சந்தனம் மற்றும் அகர்வுட்டினை கொள்வனவு செய்வதை உறுதி செய்யும் வகையில் அண்மையில் ஒப்பந்தம் மற்றும் பங்காண்மை மேற்கொண்டுள்ளது.

இலங்கை சதாஹரித குழுமத்தின் உறுப்பினரான சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம், இந்திய சந்தனத்தினை இலங்கையில் ஸ்தாபிக்க மற்றும் மேலாண்மை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சதாஹரித நிறுவனமானது சந்தன வகைகளிலேயே மிகப் பெறுமதி வாய்ந்த வகையான Santalum albumகளை 150 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தில் பொருத்தமான இடங்களில் பயிரிட்டுள்ளதுடன், ஆண்டிற்கு 75-100 ஹெக்டேராக சந்தன செய்கையை விஸ்தரித்துள்ளது.

சந்தையில் புதிதாக நுழையும் மிகச்சிறிய நிறுவனங்கள் போன்ற நிச்சயமற்ற நிறுவனங்களுடன் இணைவதனூடாக அகர்வுட் உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் அவர்களின் முதலீடு மீதான திரும்பல்கள் தொடர்பில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என பொதுமக்களுக்கு சதாஹரித எச்சரித்துள்ளது.

'உலகின் மிகப்பெரிய சந்தன எண்ணெய் வழங்குநரான Wescorp அவுஸ்ரேலியாவுடன் நாம் ஓர் புரிந்துணர்வுக்கு வந்துள்ளோம். தாம் கடுமையாக உழைத்து முதலீடு செய்யும் பணத்தின் திரும்பல்களுக்கு நாம் எமது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமளிக்க இதுவே காரணமாகவுள்ளது' என சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.

'சதாஹரிதவானது அதன் பெருந்தோட்டங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலுள்ள விஞ்ஞானிகள் மற்றும் Wescorp விஞ்ஞானிகள் மற்றும் Curtin பல்கலைக்கழகத்தின் மருந்தக கல்வியகத்துடன் இணைந்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு நிதியளித்து வருகின்றது' என Wescorp கூட்டாண்மை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சதாஹரிதவுடனான பங்காண்மையை மேலும் உறுதி செய்யும் வகையில் Wescorp நிறுவனம் தெரிவித்ததாவது, 'பிளாண்டேஷன் நிறுவனத்தின் தரம், முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சதாஹரிதவானது தரமான சந்தன மரங்களை உருவாக்க சரியான வழியை மேற்கொண்டு வருகிறது என Wescorp நம்புகிறது. இது உலகின் மிகப்பெரிய சந்தன வழங்குநரான Wescorp உடன் ஒன்றிணைய சதாஹரிதவிற்கு பெறுமதியான வாய்ப்பை வழங்கியுள்ளது' என்றார்.

நீங்கள் யாருடன் முதலீடு செய்கின்றீர்கள் என்பது குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். வனவியல் முதலீட்டு நிபுணர்களுடன் ஒன்றிணைவது உங்கள் வளமான எதிர்காலத்திற்கு சிறந்த தெரிவாக அமையும். இன்றே சதாஹரிதவை தொடர்பு கொண்டு உங்கள் முதலீடுகள் மீதான பசுமையான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இலவச ஆலோசனைகளை பெற்றிடுங்கள்!

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X