2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொறியியலாளர்களுக்கான ஜனசக்தி இடர் முகாமைத்துவ பயிற்சிப்பட்டறை

A.P.Mathan   / 2015 ஜனவரி 05 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


காப்புறுதி சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழும் ஜனசக்தி இன்சூரன்ஸ், பொறியியல் காப்புறுதி மற்றும் சிறந்த இடர் முகாமைத்துவம் தொடர்பில் பயிற்சிப்பட்டறை ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது. பொறியியல் துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு அறிவூட்டலை வழங்கும் வகையில் இந்த பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முறையான கட்டியெழுப்பல் செயற்பாட்டின் மூலமாக துரித காப்புறுதி நட்டஈட்டு கோரல்களை உறுதி செய்வதை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 

அறிவு முகாமைத்துவம் தொடர்பில் கம்பனியின் அர்ப்பணிப்பு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இந்த பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப் பயிற்சி பட்டறையானது நாட்டில் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்பாடுகளை கருத்தில் கொண்டு, பொறியியலாளர்களுடன் உறுதியான பங்காண்மைகளை ஏற்படுத்திக் கொள்வது, இடர் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்றவற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. 

ஜனசக்தி பொது காப்புறுதி பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி தயாளினி அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் உட்கட்டமைப்பு செயற்பாடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. பொறியியல் திட்டங்கள் என்பது, இயற்கைக்கு மூலதன வளங்களாக அமைந்துள்ளதுடன், நிர்மாண பணிகளின் போது அவை பல்வேறு அபாயங்களுக்கு முகங்கொடுக்கின்றன. இந்த திட்டங்கள் பூர்த்தி செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுகின்றமையால், பெருமளவு நட்டங்கள் ஏற்படுகின்றன. முறையான நிதி பாதுகாப்பு திட்டம் மற்றும் இடர் முகாமைத்துவ திட்டத்தின் மூலம் ஏற்படக்கூடிய இடர்களை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்' என்றார்.

நிர்மாணத்துறையை சேர்ந்த பெருமளவான பொறியியலாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இவர்களுக்கு இடரை குறைத்துக் கொள்ளக்கூடிய, ஜனசக்தியின் விசேட காப்புறுதி திட்டம் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. 

பொது காப்புறுதி பிரிவின் பொது முகாமையாளர் ஷானி ரணசிங்க பங்குபற்றுநர்களுக்கு இடர் மற்றும் சகல இடர் காப்புறுதி திட்டங்கள் குறித்த விளக்கங்களை எளிமையான மொழி நடையில் வழங்கியிருந்தார். இந்த விளக்கத்தின் போது, பொறியியலாளர்களும், கட்டட நிர்மாணத்துறையை சேர்ந்தவர்களும் தெரிந்திருக்க வேண்டிய பொருத்தமான உள்ளடக்கங்கள், முக்கியமான ஆவணங்கள் பற்றிய விடயங்களை தெரிவித்திருந்தார். வடிவமைப்பாளர் கட்டணங்கள் மற்றும் களத்துக்கு வெளியிலான களஞ்சியப்படுத்தல் வசதிகள் போன்ற சில காப்புறுதி நீடிப்புகள் வழங்கப்படும் முறைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். 

பிரதம இடர் பொறியியலாளர் துமிந்த அபேவிக்ரம பங்குபற்றுநர்களுக்கு ஜனசக்தியின் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய காப்புறுதி திட்டங்கள் மற்றும் சிறந்த நிர்மாண செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார். shoring, sheet-piling மற்றும் அத்திவாரம் இடுவதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்களை அவர் மேலும் வழங்கியிருந்தார்.

காப்புறுதி திட்டங்கள் நடைமுறையில் செயற்படுத்தப்பட்டிருந்த சில உதாரணங்களை இடர் பொறியியலாளர் இந்திக குமார வழங்கியிருந்தார்.

இந்த பயிற்சிப்பட்டறையை தொடர்ந்து, குழுநிலை விவாதமும் இடம்பெற்றிருந்தது. இதில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பதில் தலைவர் சி.டி.ஏ. ஷாஃப்ட்டர், இலங்கை பொறியியல் ஆலோசகர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி. கமல் லக்சிறி, சிவில் மற்றும் இடர் பொறியியலாளர் ஆலோசகர் மற்றும் சுயாதீன இழப்பு மதிப்பீட்டாளர் பந்துல அமரசேகர, பிரதம செயற்பாட்டு அதிகாரி தயாளினி அபேகுணவர்தன மற்றும் பொறியியல் முகாமைத்துவ ஆலோசகர் மற்றும் சுயாதீன இழப்பு மதிப்பீட்டாளர் ஜகத் பண்டாரநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'நிதி உறுதிப்பாடு மற்றும் காப்புறுதி வழங்கல் அனுபவத்தை கொண்டு, ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் ஆளுமை மற்றும் அனுபவம் வாய்ந்த செயலணியின் மூலமாக பொறியியல் மற்றும் நிர்மாணத்துறைக்கு புத்துருவான இடர் முகாமைத்துவ தீர்வுகள் வழங்கப்படுகின்றன. எமது சேவைகள், சர்வதேச மீள்-காப்புறுதி நிறுவனங்களுடனான பக்கபலத்துடன் அமைந்துள்ளன' என்றார். 

ஜனசக்தி இன்சூரன்ஸ் காப்புறுதி வழங்கியுள்ள செயற்திட்டங்களில் சுங்க கட்டடம், House of Fashions, பொது வைத்தியசாலையின் Neuro-Trauma அலகு, லிபர்டி பிளாஸா மற்றும் பிரத்தியேக முகாமைத்துவ கல்வியகம் போன்றன உள்ளடங்குகின்றன.

கீழ் கொத்மலை நீர்மின்சார உற்பத்தி திட்டத்துக்கான காப்புறுதி நிபுணத்துவ சேவைகளையும் ஜனசக்தி வழங்கியுள்ளது.

Contractors All Risk, Machinery Break down, Erection All Risk, Contractors Plant மற்றும் Machinery, Plant All Risk, Boiler and Pressure Plant மற்றும் இலத்திரனியல் சாதன காப்புறுதி போன்ற பரந்த பொறியியல் இடர் காப்பீட்டு தீர்வுகளை ஜனசக்தி வழங்கி வருகிறது.

நிர்மாணத்துறையை சேர்ந்த சகல இடர் முகாமைத்துவ நட்டஈடாக கம்பனி இதுவரையில் 18.87 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை 2014 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியினுள் வழங்கியுள்ளது. 

பல பில்லியன் ரூபா பெறுமதியான வீதி நிர்மாண, நீர்-மின் உற்பத்தி, நீர் விநியோக திட்டங்கள் அல்லது வானுயர்ந்த கட்டட நிர்மாண செயற்பாடுகள் போன்றன ஜனசக்தியின் திட்ட அடிப்படையிலான காப்புறுதி நிபுணத்துவம் மற்றும் சிக்கலான செயற்திட்டங்கள், உறுதியான கட்டடங்கள், பரஸ்பர அனுகூலங்களை வழங்கும் பங்காண்மைகள் போன்ற செயற்பாடுகளுக்கு காப்பீட்டு ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X