2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிலிட்டின் மாணவர் சேர்ப்பு

A.P.Mathan   / 2015 ஜனவரி 07 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


15 வருடங்களுக்கு மேலாக, இலங்கையில் உயர் தர கற்கைகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் SLIIT, கணினி, வணிகம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் கற்கைகளை வழங்கி வருகிறது. கல்வியகத்தின் மூலமாக பேணப்படும் உயர் தர கற்கைகள், விரிவுரைகள் மற்றும் வளங்கள் போன்வற்றின் காரணமாக, இந்த கற்கைகளுக்கு அதிகளவு கேள்வி நிலவுகின்றமையின் காரணமாக, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான விசேட உள்வாங்கலை ஆரம்பித்துள்ளது. 

தமது விண்ணப்பங்களை ஜனவரி 14ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன், திறன் காண் பரீட்சை 2015 ஜனவரி 18ஆம் திகதி SLIIT நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும். 

தகவல் தொழில்நுட்பத்தில் நான்கு ஆண்டு SLIIT டBSc விசேட பட்டப்படிப்பு ஆறு பிரிவுகளில் பின்தொடர்வதற்காக காணப்படுகிறது. இவையாவன தகவல் தொழில்நுட்பம், கணனி கட்டமைப்புகள் மற்றும் வலையமைப்பு, தகவல் கட்;டமைப்புகள், மென்பொருள் பொறியியல், இன்டராக்டிவ் மீடியா மற்றும் சைபர் செக்கியுரிட்டி போன்றனவாகும். தகவல் தொழில்நுட்பத்துறையில் தமது எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த கற்கை அமைந்திருக்கும்.

SLIITஇல் பயிலும் மாணவர்களுக்கு, துறைசார் அறிவு, தொழில் முன் அனுபவம், வணிக ஆளுமைகள் மற்றும் தகைமைகள் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடிவதால், எமது மாணவர்களுக்கு மேலதிக அனுகூலமாக அமைந்துள்ளது. எமது தேசத்தில் 20,000க்கும் அதிகமான நிபுணர்களை நாம் தோற்றுவித்துள்ளோம் என்பதை பெருமையுடன் அறியத்தருகிறோம்' என கல்வியகத்தின் தலைவரான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க தெரிவித்தார்.    

தகவல் தொழில்நுட்பம் மற்றும்  வணிக பட்டப்படிப்புகளுக்கான அனுமதி தேவைகளாக க.பொ.த உயர் தர பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று சித்திகளை பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன், SLIIT இனால் முன்னெடுக்கப்படும் தகுதி காண் பரீட்சையிலும் சித்தியடைந்திருக்க வேண்டும். கணினி கட்டமைப்புகள் மற்றும் வலையமைப்பு கற்கைகளை பின்தொடர்வதற்கான மேற்படி தகைமைகளுடன் கணிதம் அல்லது பௌதீகவியல் பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X