2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பங்குச்சந்தை உயர்வு

A.P.Mathan   / 2015 ஜனவரி 09 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    ச.சேகர்

தேர்தல் பெறுபேறுகளில் மைத்திரிபால சிரிசேன வெற்றியீட்டியமை தொடர்பிலான அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து, கொழும்பு பங்குச்சந்தையின் பிரதான சுட்டி சுமார் 100 புள்ளிகளால் அதிகரத்திருந்தது. பதவியை விட்டு வெளியேறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுமூகமான முறையில் தமது பொறுப்புகளிலிருந்து விடுபட சம்மதத்தை வெளியிட்டதை தொடர்ந்தும் பொருளாதாரத்துக்கு அதிகளவு பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்ப்புடன் பங்குதாரர்கள் அதிகளவு பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். 

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7605.79 மற்றும் S&P SL சுட்டி 4272.50 ஆகவும் பதிவாகியிருந்தன.

இன்றைய தினம் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற்றபோது கொமர்ஷல் வங்கி, டிஸ்டிலரீஸ் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் புரள்வு பெறுமதி 3.7 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஹேலீஸ், டயலொக் ஆக்சியாடா, கொமர்ஷல் வங்கி, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் ஆகியன அதிகளவு பங்களிப்பை பதிவு செய்திருந்தன. கலப்பு ஈடுபாடு என்பது அக்சஸ் என்ஜினியரிங் பங்குகளின் மீது பதிவாகியிருந்ததுடன், யூனியன் வங்கி, பிரமல் கிளாஸ் ஆகிய பங்குகளிலும் பிரதிபலித்திருந்தது. பான் ஏசியன் பவர், சொஃவ்ட்லொஜிக் மற்றும் சுவிஸ்டெக் பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X