2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனசக்தி உலகளாவிய பிரயாண காப்புறுதி

A.P.Mathan   / 2015 ஜனவரி 14 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி வழங்குநர்களுள் ஒன்றான ஜனசக்தி அதன் வாடிக்கையாளருக்கு விரிவான பாதுகாப்பை வழங்கும் வகையில் அதன் பிரயாண காப்புறுதி திட்டத்தினை புதுப்பித்துள்ளது.

ஜனசக்தி உலகளாவிய பிரயாண காப்புறுதி திட்டத்தின் மூலம் நோயாளர் மருத்துவமனை அனுகூலங்கள் மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவற்றுக்கு மேலதிகமாக, தற்போது வெளிநோயாளர் மருத்துவ காப்பீடு, பல்மருத்துவ நிவாரணம் மற்றும் தீவிர மருத்துவ வெளியேற்றம் ஆகியவற்றின் போதும் காப்பீட்டினை வழங்குகிறது. 

இந்த காப்புறுதி திட்டத்தினை பெயரளவிலான கட்டணத்திற்கு குடும்ப அங்கத்தவர்களுக்கும் விரிவாக்கிக் கொள்ள முடியும். அடிக்கடி வியாபார நோக்கமாக வெளிநாடு செல்பவர்களுக்கு பொருத்தமான வருடாந்த தொகுப்பு (annual package) உள்ளடக்கப்பட்டுள்ளது.

'நோய்வாய்ப்படல் அல்லது விபத்தினை சந்திக்கும் பயணிகளுக்கு மருத்துவமனை அனுகூலங்களின் கீழ் USD100,000 வரை காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் இத் திட்டத்தின் மூலம் பிரயாண பொதி தாமதமடைதல், பயணத் தாமதம் மற்றும் இரத்து, தனிநபர் பொறுப்புகள், பிரயாணப் பொதி அல்லது கடவுச்சீட்டு இழப்பு ஆகியவற்றின் போது தொந்தரவு இல்லாத வகையில் பிரயாணத்தை மேற்கொள்ள வழிவகுக்கிறது' என ஜனசக்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் உதவி பொது முகாமையாளர் கார்த்திகன் சிவா தெரிவித்தார்.

24 மணிநேர சர்வதேச உதவி அவசர அழைப்பின் ஊடாக மருத்துவ உதவிகள் வழங்கத் தயாராகவிருக்கும் உலகம் முழுவதும் உள்ள தீர்வு முகவர்களை தொடர்பு கொண்டு தமது உரிமைக்கோரல்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இக் காப்பீடானது அவசர நிலைமைகளின் போது ஆகாய மார்க்கமாக நோயாளியை தமது சொந்த நாட்டிற்கு மீள அனுப்பி வைப்பதற்கான தீவிர மருத்துவ வெளியேற்றத்திற்கான பாதுகாப்பினையும்; வழங்குகிறது.

'வெளிநாடுகளுக்கு பயணிக்கும் உங்களுக்கு எந்நேரம் வேண்டுமானாலும் சுகயீனம் ஏற்படவோ அல்லது விபத்துக்களை சந்திக்கவோ நேரிடலாம். இதன் காரணமாகவே பிரயாணிகள் ஜனசக்தியின் விரிவான உலகளாவிய பிரயாண காப்புறுதி திட்டத்தினை கொண்டிருத்தல் மிக முக்கியமாகும். 

ஜனசக்தி நிறுவனமாகிய நாம், செயற்திறன் மிக்க பிரயாணக் காப்புறுதி தீர்வினை வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளோம். இதனால் நீங்கள் எங்கிருந்தாலும், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அனைத்திற்கும் தயாரான நிலையில் உங்கள் வர்த்தகப் பயணத்தையோ அல்லது குடும்ப விடுமுறையையோ மனநிம்மதியுடன் திட்டமிட்டுக் கொள்ள முடியும்' என ஜனசக்தி நிறுவனத்தின் மோட்டார் சாரா பிரிவின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் ராஜித சமரநாயக்க தெரிவித்தார்.

'இணையம் மற்றும் மொபைல் app ஊடாக பிரயாண காப்புறுதி திட்டத்தை  வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யக்கூடிய வசதியை வழங்கும் இலங்கையின் ஒரேயொரு காப்புறுதி நிறுவனம் ஜனசக்தி ஆகும். ஜனசக்தி பிரயாண வாடிக்கையாளர்கள் தாம் விமானத்தில் ஏறிய பின்னரும் கூட, www.janashakthi.com எனும் இணையத்தளத்திற்கு பிரவேசித்தோ அல்லது டயலொக் சந்தாதாரராக இருப்பின் #103# என டயல் செய்தோ பிரயாண காப்புறுதி திட்டத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி காணப்படுகிறது. டயலொக் உடனான கைகோர்ப்பின் மூலம் பிரயாணக் காப்புறுதியில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், உள்ளக மருத்துவ அனுமதிக்கு USD 50,000 மும், எதிர்பாராத மரணம் மற்றும் நிரந்தர உடல்நலக் குறைபாடுகளுக்கு நாளொன்றுக்கு ரூ.175 படி USD 25,000 டொலரும் வழங்கப்படுகிறது. 

வணிகம் அல்லது பொழுதுபோக்கு நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையருக்கும் உயர்தரம் வாய்ந்த பாதுகாப்பினை வழங்கும் வாக்குறுதியை கொண்டுள்ள ஜனசக்தி நிறுவனம், உலகளாவிய சேவை வழங்குநர்களுடன் இணைந்து அதன் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை ஊக்குவித்து அனைத்து நஷ்டஈடுகளும் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்து வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X