Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
99X Technology ஐப் பொறுத்தமட்டில் 2014 என்பது மிகவும் சிறப்புகள் பொருந்திய ஆண்டாக அமைந்திருந்தது. பல்வேறு செயற்பாடுகளுக்காக இந்த நிறுவனம் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகள் வழங்கலின் போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம் BPMதுறையில் வர்த்தக சிறப்புகளை பின்பற்றுகின்றமைக்காக வழங்கப்பட்டிருந்த கௌரவிப்பாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டாண்மை மேலாண்மை, கொள்ளளவு கட்டியெழுப்பல், வினைத்திறன் நிர்வாகம், சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தை சென்றடைவ, கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு மற்றும் சூழல் நிலையாண்மை மற்றும் வியாபார மற்றும் நிதி பெறுபேறுகள் போன்றவற்றில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தமைக்காக 99X Technology க்கு இந்த பெருமைக்குரிய விருது வழங்கப்பட்டிருந்தது.
இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பில் 99X Technology இன் இணை தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'கம்பனியின் முழு செயற்பாடுகளையும் கருத்தில் கொண்டு கௌரவிப்பை வழங்கும் ஒரு விருதாக இது அமைந்துள்ளது. நாட்டின் சிறந்த மதிப்பை பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக நாம் திகழ்வதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். எதிர்வரும் காலங்களில் மேலும் உயர்வான நிலையை எய்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
தேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகள் வழங்கலின் போது, கடந்த ஆண்டுகளிலும் 99X Technology விருதுகளை தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விருதுகள் வழங்கல் நிகழ்வின் போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் உயர் விருதை தனதாக்கியிருந்தது. 2014 இல் இந்த விருதை வென்றமையானது, கம்பனி தனது நிதி செயற்பாடுகள் மற்றும் வியாபார செயற்பாடுகள் ஆகியவற்றை முன்னேற்றுவதற்காக தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கான கௌரவிப்பாக அமைந்துள்ளது.
இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலமாக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாக தேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகள் அமைந்துள்ளன. வியாபார தாபனங்கழள கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. வர்த்தக செயற்பாடுகளில் சிறப்பை பதிவு செய்திருந்ததுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பை வழங்கிய நிறுவனங்களை கௌரவிப்பது இந்த விருதின் நோக்கமாகும். இதன் மூலம், இலங்கையை சிறப்பான முறையில் வியாபாரங்களை கையாளும் நிறுவனங்களை கொண்ட நாடாக மாற்றியமைத்து, அதன் மூலம் நாட்டினுள் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளையும் இணை தாபிப்புகளையும் கவர்வது தேசிய வர்த்தக சம்மேளனத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
99X Technology என்பது மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமாகும். உலகளாவிய ரீதியில், குறிப்பாக ஐரோப்பாவில் காணப்படும் சுயாதீன மென்பொருள் சேவை வழங்குநர்களுக்கு (ISVs) அவசியமான மென்பொருள் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது.
இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், நோர்வே நாட்டின், ஒஸ்லோ நகரை மையமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம், இதுவரையில் 150க்கும் மேற்பட்ட மென்பொருள் தீர்வுகளை வெற்றிகரமாக வடிவமைத்து வழங்கியுள்ளது. இலங்கையில் பணிபுரிய சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் Great Place To Work கல்வியகத்தின் மூலம் 2013 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago