2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வட்டவளை பிளான்டேஷன்ஸின் இலாபம் அதிகரிப்பு

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை பிளான்டேஷன்ஸ் நிறுவனம் கடந்த 31 டிசம்பர் 2014ஆம் ஆண்டுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் 5.3 பில்லியன் ரூபாவை வருவாயாகப் பெற்றுள்ளது. இது 16.6 சதவீத வருடாந்த அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது நிறுவனத்தின் வரிக்கு பின்னரான நிகர இலாபமாக 311 மில்லியனாக அமைந்திருந்ததோடு இம்முறை 409 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் பல்வேறு காலநிலை சவால்களை எதிர்கொண்ட போதிலும் பாம் ஒயில் மூலம் எதிர்பார்த்த அளவை விட அதிகமான செயல்திறன்களை வெளிக்காட்ட முடிந்துள்ளது.

கடந்த மூன்றாம் காலாண்டுக்கான இலாபமாக 147 மில்லியன் ரூபா பெறப்பட்டது. இது வருடாந்த இலாபத்தின் 30.9 சதவீத வீழ்ச்சியாகும். இதற்கு பிரதான காரணம் தேயிலைத் தோட்ட பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவியமையே ஆகும்.

பாம் ஒயில் மூலம் கிடைத்த இலாபமானது 593 மில்லியன் ரூபாவாகும். இந்த இலாபத்தின் மூலம் றபர் மற்றும் தேயிலை உற்பத்தியினால் வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் அடைந்த நட்டத்தை ஈடுகட்ட முடிந்துள்ளது.

கடந்த மூன்றாவது காலாண்டின்போது பாம் ஒயில் மூலமாக நிறுவனம் அடைந்த இலாபமானது 172 மில்லியன் ரூபாவாகும். இதன் வளர்ச்சி விகிதம் 23.2 சதவீதமாகும். கடந்த ஒன்பது மாதங்களில் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாயானது 1.2 பில்லியன் ரூபாவாகும். இது 9.1 சதவீத அதிகரிப்பு என வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X