Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி, காப்புறுதி துறையில் அதன் 20வது வருட தலைமைத்துவத்தை கொண்டாடும் வகையில் அதன் விற்பனை ஊழியர்களை தொழில் வெற்றி நோக்கி அபிவிருத்தி செய்து வருவதுடன், இந் நிறுவனத்தின் ஆயுள் காப்புறுதி பிரிவைச் சேர்ந்த 8 அங்கத்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறவுள்ள மில்லியன் டொலர் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கான தகுதியை பெற்றுள்ளனர். அவர்களுள் ஒரு அங்கத்தவர் மாத்திரம் ஏனைவர்களை காட்டிலும் சிறப்பாக பிரகாசித்தார். அவர் ஹட்டனைச் சேர்ந்த ருவன் குமார ஆவார்.
ஜனசக்தி நிறுவனத்தில் 18 ஆண்டுகள் பணிபுரியும் ருவன், வாழ்நாள் உறுப்புரிமையை பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகளாக மில்லியன் டொலர் வட்ட மேசை மாநாட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். MDRT போட்டியில் 10 தடவைகள் கலந்து கொள்ளும் முதல் இலங்கையராக மாத்;திரமன்றி, MDRT USA கழகத்திற்கான தகுதியை பெற்ற முதலாவது ஜனசக்தி ஊழியராகவும் அவர் விளங்குகின்றார்.
மேலும் காப்புறுதி துறையில் புதிதாக நுழையும் சந்தர்ப்பத்தில் பல்வேறு விதமான சவால்களை சந்தித்ததாக ருவன் குறிப்பிட்டார். காப்பீட்டின் முக்கியத்துவத்தை பெருமளவானோர் அறிந்திராத சமயத்தில், காப்பீட்டின் கோட்பாடு தொடர்பில் மக்களுக்கு அறிமுகம் செய்தமையே அவர் முகங்கொடுத்த மிகப்பெரிய சவாலாகும். அவர் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த காலத்தில் மிகச்சிலரே காப்புறுதி திட்டங்களை கொண்டிருந்த ஹட்டன் போன்ற பிரதேசத்திலிருந்து ருவன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மனந்தளர்வதற்கு மாறாக அவர், காப்புறுதி திட்டமொன்றை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை அப் பிரதேச மக்கள் மத்தியில் விழிப்பூட்டுவது தொடர்பில் ருவன் கடுமையாக உழைத்தார்.
ருவனின் தந்தை ஒரு விவசாயி. அவருடைய தொழிலை ருவனும் பின்பற்ற வேண்டும் என தந்தை விரும்பினார். இருப்பினும், ருவன் விடாமுயற்சியுடன் கடுமையாக உழைத்து அப்பகுதி மக்கள் மத்தியில் காப்பீட்டின் தேவை குறித்து வலியுறுத்தினார். அவரது முயற்சிக்கு ஜனசக்தி ஆதரவளித்ததுடன், கடின உழைப்பையும் கௌரவித்திருந்தது. இதனால் ருவன் மோட்டார் சைக்கிள், கார், புதிய மனை மற்றும் அலுவலகம் போன்றவற்றை கொள்வனவு செய்யும் அளவிற்கு தம்மை உயர்த்திக் கொண்டார்.
'எனது கனவினை நனவாக்குவதற்கு தேவையான ஆதரவினை வழங்கிய ஜனசக்திக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எனது இலக்கினை அடைவதை எளிதாக்கும் வகையிலான சிறந்த பல திட்டங்களை ஜனசக்தி கொண்டுள்ளது. இலங்கை சார்பாக பங்குபற்றுவதற்கும், அனுபவத்தை பகிர்ந்து கொள்ள மற்றும் ஏனைய நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்குமான பெறுமதி வாய்ந்த அனுபவமாக MDRT மாநாட்டில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. நான் தற்போது ஐக்கிய அமெரிக்காவிற்கு 8 தடவைகள் பயணித்துள்ளேன்' என ருவன் தெரிவித்தார்.
ஜனசக்தி நிறுவனம் ஊழியர்கள் பிரகாசிப்பதற்கான ஆதரவு மற்றும் வாய்ப்பினை வழங்குகிறது. வெல்லவாயவைச் சேர்ந்த மானெல் ராஜபக்ஷ மிகக்குறுகிய காலத்தில் அதாவது MDRT வருடாந்த இலக்கினை 9 மாதத்தில் பூர்த்தி செய்து கடந்தாண்டு இடம்பெற்ற MDRT இல் பங்குபற்றுவதற்கான தகுதியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனசக்தியின் சிறந்த பயிற்சி திட்டங்களே இதற்கு காரணம் என அவர் தெரிவித்தார். அவரது சக பணியாளர்கள் MDRT இற்கு தகுதி பெறுவதை கண்டு தாம் உந்துசக்தியை பெற்றதாக மானெல் தெரிவித்தார்.
ருவனைப் போல மானெலும் அவரது பிரதேசத்தில் கடுமையாக உழைத்து பொலிஸார் முதல் ஆசிரியர்கள் வரை பரந்துபட்ட மக்களை தனது வாடிக்கையாளர்களாக உருவாக்கிக் கொண்டவராவார். 'எனது தொழில் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு என்னை ஜனசக்தி கொண்டு சென்றுள்ளதுடன், இந் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றார்.
ருவன் மற்றும் மானெல் ஆகியோரை தவிர்ந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.தீபா, ஆர்.ரபீத்வஜன் மற்றும் வி.பிரபாகரன், ஆயுள் - தலைமைக் காரியாலயத்தை சேர்ந்த அமில ஹர்ஷன மற்றும் எம்.ஏ.எஸ்.டி.பிரசன்ன, மஹரகமவைச் சேர்ந்த எஸ்.பிரதீப் ஜயவர்தன ஆகிய ஜனசக்தி ஆயுள் குழுவை சேர்ந்த 6 உறுப்பினர்கள் இவ்வருடம் நடைபெறவுள்ள USA MDRT இல் பங்குபற்றவுள்ளனர். அங்கு அவர்கள் உலகம் முழுவதுமிருந்து வருகை தரும் சர்வதேச விற்பனை நிபுணர்களை சந்திப்பதற்கான வாய்ப்பினை பெறுவர். யாழ்ப்பாணத்திலிருந்து மூவர், கொழும்பிலிருந்து மூவர் ஹட்டனிலிருந்து ஒருவர் மற்றும் மொனராகலையிலிருந்து ஒருவர் இதற்கு தகுதி பெற்றதிலிருந்து ஜனசக்தி நாடுமுழுவதும் உள்ள தமது விற்பனை படையினருக்கு சமனான வாய்ப்புக்களை வழங்குகிறது என்பது தெளிவாகின்றது.
ஜனசக்தி தொடர்ந்து அதன் ஊழியர்களின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தி வருவதுடன், வருடாந்தம் பயிற்சி மற்றும் அபிவிருத்திகளுக்காக ரூ.50 மில்லியனுக்கும் மேலாக முதலீடு செய்து வருகிறது. எமது அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் அண்மையில் இடம்பெற்ற SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் விழாவில் வெள்ளி விருதை ஜனசக்தி வென்றெடுத்தது. ஊழியர்களை மேம்படுத்தும் வகையில் விற்பனை, நிபுணத்துவம், சிறந்த நடைமுறைகளை பகிரல், சர்வதேச செயலமர்வுகளில் பங்குபற்றச் செய்தல் போன்வற்றை உறுதி செய்யும் வகையில் உள்ளக மில்லியன் டொலர் வட்ட மேசை வெற்றி கழகத்தை நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
19 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago