A.P.Mathan / 2015 பெப்ரவரி 20 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி நிறுவனம், அண்மையில் கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற உலகளாவிய வர்த்தக சிறப்பு விருதுகள் நிகழ்வில் 'சேவைகள் பிரிவில்' விருதொன்றை வென்றெடுத்துள்ளது. மேலும் கடல்சார்ந்த காப்புறுதி துறையில் மிகச்சிறந்த சர்வதேச வர்த்தக செயற்பாட்டாளராகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது.
'இந்த விருதுகள் திட்டத்தின் கோட்பாடு, இதில் எவ்வித விண்ணப்பங்களும் உள்வாங்கப்படவில்லை என்பதாகும். தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியன ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் விமானநிலைய மற்றும் விமான சேவைகள் போன்ற அரச நிறுவனங்களினால் மெரிட் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பின்னர் இறுதிப்பட்டியல் மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருந்தன' என கொழும்பு Shipper's Academy இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் மசகோரல தெரிவித்தார்.
'இந்த வழிமுறையில் இந் நிறுவனங்களின் உண்மையான செயற்பாடுகள் மற்றும் சிறந்த தொழிலை மேற்கொள்வது எந்நிறுவனம் என்பது தொடர்பில் அடையாளம் காணக்கூடியதாக அமைந்துள்ளது. காப்புறுதி துறையிலுள்ள மிகச்சிறந்த நிறுவனங்களுள் நான்காவது இடத்தில் ஜனசக்தி திகழ்கிறது' என சிறப்பாக செயற்திறனை வெளிப்படுத்தியிருந்த ஜனசக்தியை பாராட்டிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகளாவிய வர்த்தக சிறப்பு விருதுகள் நிகழ்வு என்பது உலகளாவிய வர்த்தக துறையில் GDP வளர்ச்சிக்கு மிகப் பாரியளவில் பங்களிப்பு வழங்கும் நிறுவனங்களை அடையாளப்படுத்தி வரும் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் பெருமைக்குரிய நிகழ்வாகும். பயிற்சி திறன்கள், திறன் கட்டியெழுப்பல் மற்றும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் சரக்கியல் துறையில் ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களான இலங்கை மத்திய வங்கி மற்றும் கொழும்பு Shippers Academy ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்யும் இந் நிகழ்வில் பல்வேறு துறைகளின் கீழ் விருதுகள் அங்கீகரிக்கப்படுகின்றன. 2014 இல் 100 இற்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், ஏற்றுமதியாளர்கள், வங்கி, வர்த்தகநாமம் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
'எந்தவொரு நேரத்திலும் பேரழிவு தாக்கக்கூடும் என்பதால் வர்த்தகத்திற்கு தேவையான தற்காலிக திட்டத்தை கொண்டிருக்க வேண்டியமை மிக முக்கியமாகும். இதன் காரணமாகவே கடல்சார்ந்த உள்ளிட்ட கூட்டாண்மை துறையின் பல பிரிவுகளுக்கு நாம் விரிவான அபாய முகாமைத்துவத்தை வழங்கி வருகிறோம். எமது திட்டங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளதுடன், உங்கள் சரக்கு தொந்தரவு இல்லாத, திறமையான முறையில் கொண்டு செல்லப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இந்த அணுகுமுறையானது எமது கடல்சார்ந்த வணிக இலாகாக்களின் வளர்ச்சி வருடந்தோறும் ஆரோக்கியமானதாக அமைந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது' என மோட்டார் சாராத பிரிவின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் ராஜித சமரநாயக்க தெரிவித்தார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கான புதிய e-marine சேவைகளின் தொந்தரவு அற்ற ஒன்லைன் பரிமாற்றல் வசதிகள்; போன்றன ஜனசக்தியின் கடல்சார் உற்பத்தி இலாக்காக்களின் மற்றுமொரு பிரபலமான பெறுமதி சேர்ப்பாகும்' என மேலும் அவர் தெரிவித்தார்.
தனித்துவமான நஷ்டஈட்டு கோரிக்கை தீர்வு வழங்குவதில் இலங்கையில் 3ஆவது பெரிய காப்புறுதி வழங்குநராக ஜனசக்தி திகழ்வதுடன், கடந்த 19 ஆண்டுகளாக ரூ.20 பில்லியனுக்கும் அதிகமாக செலுத்தியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கடல்சார்ந்த சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் சிறப்பான அறிவை கொண்டுள்ள ஜனசக்தி மிகவும் செலவு குறைந்த வழியில் வாடிக்கையாளர்களின் காப்பீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வலிமை மற்றும் நிபுணத்துவத்தை கொண்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago