2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Royal Institute உடன் கைகோர்த்துள்ள Pearson

A.P.Mathan   / 2015 மார்ச் 05 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி Diploma கற்கைகளை முன்னெடுக்கும் வகையில் Pearson முன்வந்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு பெப்ரவரி 27 ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த Diploma கற்கை கொழும்பு Royal Institute இனால் வழங்கப்படவுள்ளது.

முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி துறையில் தமது எதிர்காலத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த கற்கை அமைந்துள்ளது. பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்கள், வெளிநாட்டு கற்பித்தல் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளவர்களுக்கும், நிபுணத்துவ வழிகாட்டல் மற்றும் ஆளுமைகளை கொண்டுள்ள ஆசிரியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் இந்த கற்கை அமைந்திருக்கும். இந்த கற்கையை தொடர்பவர்கள் முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி கற்பித்தல் செயற்பாட்டுக்கு அவசியமான ஆளுமைகளை கொண்டிருப்பதுடன், வகுப்பறைகளை சிறந்த முறையில் நிர்வகிக்கும் வகையில் அமைந்துள்ளனர். இதற்கு மேலதிகமாக தகைமையை பெற்றுக் கொள்பவர்கள், தமது மென் ஆளுமைகள் மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பார்கள்.  

'எமது தகைமை கட்டமைப்பில் நாம் உள்ளடக்கியுள்ள நவீன பாடத்திட்டமாகும். பயிற்றுவிக்கப்பட்ட, ஆளுமை நிறைந்த முன்பள்ளி ஆசிரியர்களை உருவாக்கும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. Pearson மூலமாக வழமையான ஆசிரியர் பயிற்றுவிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்ட பிரிவில் அவசியமான ஆளுமைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என Pearson இன் ஆசியா பிராந்தியத்தின் பணிப்பாளர் பிரேமிளா போல்ராஜ் தெரிவித்தார்.

இந்த பிரிவில் தகைமை வாய்ந்த முன்பள்ளி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் பயில்வோருக்கு நிஜ வாழ்வில் இடம்பெறக்கூடிய விடயங்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பயிலுநர்களுக்கு நிஜ வாழ்க்கை சூழலில் இடம்பெறக்கூடிய அனுபவத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கற்கை நெறியில் நான்கு பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. ஆரம்ப கல்வி, முன்பள்ளி முறையிலான கல்வி, உளவியல் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த உள்ளம்சங்களில் சிறுவர்களை மையமாக கொண்ட கல்வி, ஆரோக்கியம் மற்றும் போஷாக்கு மற்றும் தனிநபர் மதிப்பீடு போன்ற பாடங்கள் உள்ளடங்கியுள்ளன.   

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த கற்கையை பூர்த்தி செய்த பயிலுநர்கள் இலங்கையில் தகைமை பெற்ற முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி ஆசிரியர்களாக திகழ முடியும். இந்த பயனுள்ள தகைமை என்பது பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு புலம்பெயர எதிர்பார்ப்போருக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

துறைசார் தரங்கள் மற்றும் கேள்விகளை உயர்ந்த மட்டத்தில் பேணுவதுடன், Pearson இனால் உறுதி செய்யப்பட்ட முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்விக்கான Royal Institute Diploma என்பது உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது. முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்விக்கான எதிர்கால தலைமுறை என்பது Person Edexcel வழிகாட்டலின் கீழ் அமைந்துள்ளதுடன், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பெறுமதி வாய்ந்த தொழில் நிலையை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 

பிரித்தானியாவின் மாபெரும் கல்வி, தொழில்நிலை மற்றும் தொழில் அடிப்படையிலான கல்வித் தகைமைகளை வழங்கும் அமைப்பாக Person Edexcel திகழ்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X