2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எல்.பீ பினான்ஸின் இரு கிளைகள் யாழில் திறப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 19 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

எல்.பீ பினான்ஸ் நிதி நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் இன்று வியாழக்கிழமை (19), யாழ்ப்பாண நகரில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிறுவனங்களின் முதன்மைக் கிளை அலுவலகம், யாழ்ப்பாணம் - ஆஸ்பத்திரி வீதியிலும் யாழ்.நகரக் கிளை, ஸ்டான்லி வீதியிலும் திறந்து வைக்கப்பட்டன.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமித் ஆதிஹெட்டி, நாடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக இவ்வலுவலகங்களைத் திறந்து வைத்தார்.

இணை முகாமையாளர் இ.ரவிராஜ் மற்றும் கிளை உத்தியோகஸ்தர்கள், யாழ். பொலிஸ் அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X