2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

UTE-CATஇன் வர்த்தக நாம தூதுவராக லலித் குமார தெரிவு

A.P.Mathan   / 2015 மார்ச் 20 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுனைட்டட் டிராக்டர்ஸ் அன்ட் எக்யுப்மன்ட் (UTE) இன் வர்த்தக நாம தூதுவராக நட்சத்திர கொல்ஃப் வீரரான லலித் குமார தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்த நியமனம் தொடர்பிலான அறிவித்தல், லலித் குமார போன்ற ஆரம்ப நிலையிலுள்ள நட்சத்திர கொல்ஃப் வீரர்கள் மற்றும் கொல்ஃவ் வீரர்களுக்கான உதவியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 
திருகோணமலை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கொல்ஃப் திடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், இந்த விளையாட்டு மிகவும் பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த கொல்ஃப் வீரர்கள் சர்வதேச ரீதியில் தமது பெயர்களை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிவதுடன், குறிப்பாக ஆசிய பிராந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான்  மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் பிரபல்யம் பெற்றுள்ளனர். மித்துன் லியனகே மற்றும் அனுர ரோஹண போன்ற பெருமளவான வீரர்கள் இந்திய சுற்றில ; சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, இந்திய சுற்றில் லலித் குமாரவும் சிறப்பாக செயலாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 வயதுக்குட்பட்ட ஸ்ரீலங்கன் கனிஷ்ட சம்பியன்சிப் போட்டிகளில் வெற்றியீட்டியிருந்ததன் ஊடாக, தனது ஆரம்ப வயதிலேயே லலித் குமார இந்த விளையாட்டின் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, ஆரம்ப நிலை கொல்ஃப் விளையாட்டு வீரராக 2000 ஆம் ஆண்டில் அகில இந்திய சம்பியன்சிப் பட்டத்தை இவர் வென்றிருந்ததுடன், பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பியன்சிப் போட்டிகளில் இரண்டாமிடத்தை தனதாக்கியிருந்தார். 

இவரின் திறமைகள் சிறப்பாக வெளிப்பட்டிருந்த ஆண்டாக 2004 அமைந்திருந்தது. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் சர்வதேச விருதுகளை வென்றதன் மூலம் தென்காசிய ஆரம்ப நிலை கொல்ஃப் போட்டிகளின் ஜாம்பவானாக தெரிவாகியிருந்தார். இந்த உயர்ந்த நிலையை வேறெந்தவொரு ஆரம்ப நிலை கொல்ஃவ் வீரரும் எய்தவில்லை. 

நிபுணத்துவம் வாய்ந்த போட்டிகளில் ஈடுபடுவது என்பது அதிகளவு செலவீனம் நிறைந்தது. எனவே லலித் குமாரவுக்கு வெளிநாடுகளில் இடம்பெறும் போட்டிகளில் பங்கேற்கும் போது அடிப்படை வசதிகளான பயண செலவுகள், கொல்ஃவ் சாதனங்கள் மற்றும் தங்குமிட செலவுகள் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு UTE முன்வந்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கௌரவிப்பை பெற்றுக் கொடுக்கக்கூடிய போட்டியாக கொல்ஃவ் விளையாட்டை தரமுயர்த்துவதில் UTE தனது பங்களிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆர்வமுள்ள இளம் வீரர்களுக்கு வெறுமனே ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் அமைந்துவிடாமல், நிலையான வருமானத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய மற்றும் சிறந்த எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு விளையாட்டாக கொல்ஃவ் அமைந்துள்ளது என UTE இன் தலைவர் பிரியாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

இலங்கையில் 300 பேர் வரை கொல்ஃவ் விளையாட்டில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தது. தற்போது, லலித் குமாரவுடன் ஆறு நிபுணத்துவம் வாய்ந்த கொல்ஃவ் வீரர்கள் இந்திய சுற்றில் விளையாடுவதற்கான தகைமையை பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X