Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 21 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைக்ரோசொவ்ட் நிறுவனமும் ஈ-விஸ் நிறுவனமும் இணைந்து மலிவான விலைக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய புதியதொரு கலப்பு சாதனமான (Hybrid) Tablet ஒன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. E-Wis T900G என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள இந்த Tabletஐ மடிகணினி (LapTop) ஆகவும் பயன்படுத்த முடியும். இதன் கணினி விசைப்பலகையையும் (Key Board) Tabletஐயும் இலகுவாக பிரிக்கக் கூடியவிதத்தில் இந்த கலப்பு சாதனம் அமைந்துள்ளதோடு ஒரு Tabletஇன் விலையிலும் பார்க்க 4இல் ஒரு பகுதி விலையைக் கொண்டதாகும்.
Quad core Intel processor உடன் கூடிய 2GB கொண்ட DDR3 Memory மற்றும் 32GB கொண்டதாகும். இது HD LCD (உயர் திரவ படிக டிஸ்ப்ளே - High Definition Liquid Crystal Display) Touch Screen Display கொண்டதோடு அதன் Resolution Pixel 1920x1080 ஆகும். 2 மெகா பிக்சலைக் கொண்ட வெப் கெம் வசதியைக் கொண்டதோடு 5 மெகா பிக்சலைக் கொண்ட உயர் தர பிற்புற கெமரா வசதிகளையும் கொண்டதாகும்.
இதனுடன் அசல் (Genuine) மைக்ரோசொவ்ட்டின் Windows 8.1 மென்பொருள் Operating System, ஒரு வருடகாலத்திற்கு இலவசமாக Office 365 மென்பொருள் வசதியும், 1TB டெரா பைட் Cloud இடவசதியும் பெற்றுக் கொடுக்கப்படுவதோடு மாதம் ஒன்றுக்கு 60 நிமிடங்களுக்கு Skypeஇல் இருந்து கையடக்கத் தொலைபேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்துவதற்கான வசதிகள் வழங்கப்படும்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த EWIS நிறுவனத்தின் பொது முகாமையாளர் ராஜித்த டி சில்வா கருத்து தெரிவித்கையில், 'இந்த சாதனமானது பாவனையாளர்களின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். கூட்டு நிறுவன தொழிலாளி ஒருவர் இந்த கலப்பு சாதனத்தினை பயன்படுத்துவதன் மூலம் அவரது தொழில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இச்சாதனத்தில் Word, Excel, PowerPoint, Outlook, OneNote மற்றும் Access ஆகிய வசதிகள் காணப்படுவதுடன், ஏனைய வசதிகளையும் கொண்டுள்ளது. அதேவேளை இந்த சாதனம் ஒரு மடிகணினியாகவும் Tablet ஆகவும் பயன்படுத்த முடியும.; இந்த சாதனத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாம் வாழ்க்கைக்கு ஒரு புதிய எல்லையை நோக்கி செல்ல முடிந்துள்ளது' எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த EWIS நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜீவ விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'மாறும் வாழ்க்கை முறைக்கேற்ப தேவைகளும் மாறுகின்றன. இன்று மொபைல் சாதனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே செல்கின்றது. கல்வித்துறை மற்றும் கூட்டுநிறுவன தேவைகளுக்கேற்ப எமக்கு இச்சாதனத்தை வடிவமைக்க முடிந்துள்ளதுடன் இதன் மூலம் தொழிற்துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம். மைக்ரோசொவ்ட் உடன் கைகோர்ப்பதன் மூலம் நாம் கிராமிய கல்வித்துறையில் சில முன்னோடித் திட்டங்களை எம்மால் மேற்கொள்ள முடிந்ததுடன் இதன் மூலம் நாம் கிராமிய கல்வித்துறையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு இச்சாதனத்தை மலிவான விலைக்கு வழங்குவதன் மூலம் மாணவர்களை Digital உலகிற்கு தொடர்புபடுத்துவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். எதிர்வரும் வருடங்களில் Mobile சாதனங்களுக்கான தேவை பாரிய அளவில் அதிகரிக்கும் என்பதோடு இந்த சாதனத்தின் அறிமுகமானது கூட்டு நிறுவன, கல்வித்துறைக்கு பாரிய வசதிகளை வழங்கும் என்பதுடன் இதன்மூலம் இலங்கை கல்வித் துறையை ஒரு புதிய எல்லைக்கு எட்டிச் செல்ல எதிர்பார்க்கின்றோம்' எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் வதிவிட முகாமையாளர் இம்ரான் வில்கசீம் கருத்து தெரிவிக்கையில், 'நாம் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கக் கூடிய வகையில் EWIS உடன் கைகோர்த்துள்ளதோடு, இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெற்றியளிக்கக் கூடிய பல திட்டங்களையும் முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். மைக்ரோசொவ்ட் கையடக்கத் தொலைபேசியில் முதல் முறையாக தமது தேவைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. Cloudஐ முதலில் உலகிற்கு கொண்டுவந்தது மற்றும் தற்போது EWIS அனைத்து மக்களின் தேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு சிறந்த தொழில்நுட்ப சாதனமாக அமையும். நாம் EWIS உடன் கைகோர்த்தமையின் ஊடாக வெற்றியளிக்கக் கூடிய வன்பொருள்களை உள்ளுர் மற்றும் பிராந்திய சந்தைக்கு மலிவான விலையில் கொண்டு செல்வதற்காக இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசொவ்ட்டின் கவனம் திரும்பியுள்ளது' எனத் தெரிவித்தார்.
40 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago