Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 27 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச வாய் சுகாதார தினம் வருடாந்தம் மார்ச் மாதம் 20 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. சிறந்த வாய்ச் சுகாதார பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டமாக இது அமைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக 'வாழ்க்கைக்கான புன்னகை' என்பது அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 'வாழ்நாள் முழுவதுக்குமான புன்னகை' மற்றும் 'வாழ்க்கையை கொண்டாடுவது' என்பது பொருள்படுகிறது.
ஹேமாஸ் மெனுஃபக்சரிங் லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி பற்பசை வர்த்தக நாமமான க்லோகாட், அண்மையில் நாடு முழுவதும் பற்சிதைவை தடுப்பது தொடர்பில் குடும்பங்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இந்த திட்டத்தின் மூலமாக, பழக்க வழக்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக ஆரோக்கியமான, பற்சிதைவிலிருந்து விடுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவது நோக்கமாக அமைந்திருந்தது. பற்சிதைவை இல்லாமல் செய்வது தொடர்பிலான தேசிய செயற்திட்டத்துக்கு அமைவாக, க்லோகாட் தற்போது முன்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வாய் சுகாதார பராமரிப்பு விழிப்புணர்வை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பற்சிதைவு பற்றி அவர்களின் மூலமாக தெளிவுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த ஆண்டு உலக வாய்ச்சுகாதார தினத்தை கொண்டாடும் வகையில், க்லோகாட் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் கைகோர்த்து, இலங்கையின் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. மார்ச் மாதம் 19ஆம் திகதி, முன்பள்ளி ஆசிரியர்கள் 200 பேர், அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த மஹமத்யா வித்தியாலயத்துக்கு வருகை தந்து, அங்கு இடம்பெற்ற 'முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாய்ச் சுகாதாரம் தொடர்பான ஊக்குவிப்பு மற்றும் கல்வி' செயற்திட்டத்தில் பங்கேற்றிருந்தனர். சுகாதார அமைச்சின் (பல் சேவைகள்) பிரிவின் பதில் பொது பணிப்பாளர் வைத்தியர். ஜே.எம்.டபிள்யு ஜயசுந்தர பண்டார, மேல் மாகாண சுகாதார சேவைகள் பிரிவின் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர். தீப்தி பெரேரா, கொழும்பு சுகாதார சேவைகள் பதில் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர். பிரகீத் தர்ஷன மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் இதர அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் வாய் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துவது எதிர்கால தலைமுறைக்கு அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்திருக்கும் என க்லோகாட் நம்புகிறது. ஆரோக்கியமான வாய் சுகாதாரத்தை பேணுவது தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர். இந்த செயற்திட்டம் தொடர்பில் கொழும்பு பிராந்திய மேலதிக பல் வைத்திய நிபுணர் வைத்தியர். விபுல விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில், 'எமது இலக்கு என்பது, இளம் பிள்ளைகள் மத்தியில் பற் சூத்தை என்பதை குறைப்பது என்பதாக அமைந்துள்ளது. அவர்களின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் பற் சூத்தையிலிருந்து விடுபட்ட வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவும் இது முக்கியத்துவமாக அமைந்துள்ளது. சர்வதேச வாய் சுகாதார தின தொனிப்பொருளான 'வாழ்க்கைக்கான புன்னகை' என்பதற்கமைவாக, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வாய்ச் சுகாதாரம் தொடர்பான பயிற்சிகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம். முன்பள்ளி ஆசிரியர்களுக்கு போதியளவு விளக்கங்களை வழங்குவதன் மூலமாக, எமது இளம் தலைமுறையை 'வாழ்க்கைக்கான புன்னகை' உடன் திகழச் செய்ய முடியும்' என்றார்.
ஹேமாஸ் நிறுவனத்தின் நோக்கமான, 'எமது நுகர்வோரின் வாழ்க்கையை வளமூட்டுவது' என்பதற்கமைவாக, இந்நிகழ்வின் வாய்ச் சுகாதார பங்காளராக க்லோகாட் ஒன்றிணைந்திருந்தது. ஒவ்வொரு முன்பள்ளி ஆசிரியருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டலாக அதை பயன்படுத்தக்கூடிய வகையிலான வாய் சுகாதார தொகுதி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தது. இந்த தொகுதியில், தொடர்பாடல் வாய்ந்த, பிள்ளைகளுக்கு நட்பான வாய் சுகாதார பொருட்கள் உள்ளடங்கியிருந்தன.
ஹேமாஸ் மனுஃபக்ஷரிங் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரோய் ஜோசப் கருத்து தெரிவிக்கையில், 'நிறுவனம் எனும் வகையில் எமது ஒன்றிணைந்த செயற்பாடுகளின் மூலமாக, ஹேமாஸ் நாடு முழுவதையும் சேர்ந்த மக்களின் வாய்ச் சுகாதாரம் தொடர்பிலான முன்னணி கூட்டாண்மை முன்னோடியாக மாற்றமடைந்துள்ளது. இந்த செயற்திட்டத்தின் மூலமாக, க்லோகாட் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாய்ச்சுகாதாரம் குறித்த கல்வியை வழங்கியுள்ளது. இலங்கையின் முதல் தர பற்சூத்தையை தவிர்க்கும் தயாரிப்பு எனும் வகையில் எமது நுகர்வோரை அறிந்து, அவர்களுக்கு சிறந்த சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது எமது கடமையாக அமைந்துள்ளது என்பதை நாம் உணர்ந்தோம். இளம் வயதில் சிறந்த பழக்கங்களை பின்பற்றுவதன் மூலமாக, எமது நாடான இலங்கையை பற்சிதைவிலிருந்து விடுபட்ட நாடாக தரமுயர்த்துவதற்கு வழிவகுக்கும்' என்றார்.
கராம்பு எண்ணெய் நலன் மற்றும் விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்பட்ட புளோரைட் ஆகியவற்றை கொண்ட க்லோகாட் தேசத்தின் பற் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தும் பராமரிப்பு பற்பசையாக அமைந்துள்ளது. இந்த சேர்மானத்தின் மூலமாக, இயற்கை மற்றும் விஞ்ஞானம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு, இலங்கையின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாய்ச் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
18 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago