2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பரிசுப்பொதிகளை வழங்கிய டிரையம்ப் நிறுவனம்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உண்மையான அழகினை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய வகையிலான உள்ளாடைத் தெரிவுகளை வழங்கி வரும் டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனம் அண்மையில் மூன்று அதிர்ஷ்டசாலி ஜோடிகளுக்கு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆடம்பரமான இராப்போசன விருந்தினை வழங்கியிருந்தது. டிரையம்ப்பின் காதலர் தின ஊக்குவிப்பு திட்டத்தின் ஓர் அங்கமாக, பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை மெஜஸ்டிக் சிட்டி, லிபர்ட்டி பிளாசா, Crescat, Alfred House Gardens, கண்டி சிற்றி சென்டர் மற்றும் மொறட்டுவ மற்றும் கப்புவத்தை K- Zones ஆகிய இடங்களிலுள்ள டிரையம்ப் பிரத்தியேக காட்சியறைகளில் ரூ.3000 க்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு இவ் விசேட குலுக்கல் தெரிவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 350 இற்கும் மேலாக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து நயனா நாணயக்கார சபுதன்திரிகே, நதாஷியா செவ்வந்தி மற்றும் ரிஷானி உடுகம ஆகியோரே இராப்போசன விருந்துபசாரத்தை பெறும் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

டிரையம்ப் அதன் காதலர் தின ஊக்குவிப்பு திட்டம் ஊடாக தமது அன்புக்குரியவளுக்கு மலர்களையோ அல்லது சொக்லட்டுகளையோ காட்டிலும் நேர்த்தியான டிரையம்ப் உள்ளாடைத் தெரிவுகளை அன்பளிப்பாக வழங்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. காதலர் தின பருவகாலத்தில் டிரையம்ப் காட்சியறைக்கு விஜயம் செய்தவர்களுக்கு அழகிய பிங்க் முதல் சிவப்பு ஆகிய வர்ணத்தெரிவுகள் கொண்ட உள்ளாடை தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தன.

மேலும் டிரையம்ப் அதன் ஒன்லைன் ரசிகர்களுக்கு அன்பை அனைத்து வழிகளிலும் கொண்டாட வருமாறும் அழைப்பு விடுத்திருந்தது. டிரையம்ப் ஆனது அதன் உத்தியோகபூர்வ 'பேஸ்புக்' இல் 'New Colours of Love' படங்களில் குறித்த நபரை tag செய்து மூன்று வார்த்தைகளில் கமென்ட் செய்யக்கூடிய வகையிலான டிஜிட்டல் தளத்தை உருவாக்கியிருந்தது. 

இரண்டு விசேட ஒன்லைன் ரசிகர்களான நதாஷியா செவ்வந்தி மற்றும் என்.டி.நாணயக்கார சபுதன்திரிகே ஆகியோருக்கு காதலர் தினத்தன்று மிகவும் அழகிய சிவப்பு ரோஜாக்களும், டிரையம்ப் அன்பளிப்பு பொதியும் வழங்கப்பட்டிருந்தன. டிரையம்ப் நிறுவனம் காதலர் தின ஊக்குவிப்பு ஊடாக அன்பு என்பது வெறும் வார்த்தைகளால் அல்ல அதை நிஜத்தில் நிரூபிப்பதிலேயே தங்கியுள்ளது என்பதை வாடிக்கையாளருக்கு நினைவூட்டியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X