2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவித்த சதாஹரித பிளாண்டேஷன்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 04 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பசுமை முதலீட்டுத் தீர்வுகளை வழங்கி வரும் முன்னோடிகளுள் ஒன்றான சதாஹரித பிளாண்டேஷன் குழுமமானது அண்மையில் அத்திடிய Eagles Banquets மற்றும் மாநாட்டு மண்டபத்தில் 'Seize your glory' எனும் தொனிப்பொருளின் கீழ் அதன் வருடாந்த விற்பனை மாநாட்டினை முன்னெடுத்திருந்தது.

பெருந்தோட்டத்துறையில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ள சதாஹரித பிளாண்டேஷன் குழுமமானது இலங்கையில் அகர்வூட், சந்தனம், மஹாகோனி, தேக்கு, தேயிலை ஏற்றுமதி மற்றும் ஏனைய உற்பத்திகள் போன்றவற்றுக்கான பசுமை முதலீட்டு துறையில் முன்னோடியாக திகழ்கிறது. 'குறுகிய கால இலக்கினை அடிப்படையாகக் கொண்டதல்ல எமது நோக்கம். ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு புத்திசாலித்தனமான முதலீடுகளை உருவாக்கி ஒரே தேசமாக வளர்ச்சியடைவதே எமது குறிக்கோளாகும்' என சதாஹரித பிளாண்டேஷன் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பசுமை முதலீடுகளில் 1 பில்லியன் ரூபா வருமானத்தையும், பசுமையான இலங்கையை உருவாக்குவதற்கான பங்களிப்பையும் வழங்கிய சுமார் 600 இற்கும் மேற்பட்ட விற்பனை ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன கௌரவிக்கப்பட்டிருந்தன.

இதன்போது புதிய வர்த்தக உருவாக்கம், மொத்த பிரீமியம்; வாடிக்கையாளர் உருவாக்கம், வாடிக்கையாளர் தக்கவைப்பு குறிகாட்டி எய்தியவர்கள், மீட்சி எய்தியவர்கள் மற்றும் மொத்த வருமான உருவாக்கத்தை எய்தியவர்கள் போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ் 120 இற்கும் அதிகமான விசேட சாதனையாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.

'இன்று பாராட்டப்படும் இந்த சாதனையாளர்களின் கடின உழைப்பு நிறுவனத்தின் சார்பாக மாத்திரமன்றி, பசுமையான இலங்கைக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்புக்கும் கிடைத்த கௌரவிப்பாகும். அவர்களின் வெற்றியானது எமது எதிர்கால தலைமுறையினர், எமது குழந்தைகள் மற்றும் தாய்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் கிடைத்த பரிசாகும்' என சதாஹரித பிளாண்டேஷன் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.

புதிய வனவியல் முதலீட்டு தீர்வுகள் வழங்குவதில் முன்னோடியான சதாஹரித நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு சிறந்த முதலீட்டு திரும்பல்களையும், முதல் தர சேவைகளையும் வழங்கி வருகின்றது. மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 0094(0)11 5234000 அல்லது பிரவேசியுங்கள் www.Sadaharitha.com.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X