Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழுநிலை செயற்பாடு, பிரச்சனைகளை தீர்த்தல் மற்றும் தலைமைத்துவ ஆளுமைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், SLIIT இன் வணிக பீடத்தினால் 'Soft Skills + 2015' என்பது தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலபேயில் அமைந்துள்ள SLIIT பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாடு முழுவதையும் உள்ளடக்கி, பாடசாலைகளுக்கிடையிலான வினா போட்டி மற்றும் Soft Skills பயிற்சிப்பட்டறை என்பது 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 375 மாணவர்களை கவர்ந்திருந்தது.
இந்த நிகழ்வு இரு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதலாவது பிரிவு அதிகளவு குதூகலமாக விடயங்களை உள்ளடக்கிய குழுநிலை செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவற்றின் போது ஆக்கபூர்வமான சிந்தனை, நேர முகாமைத்துவம், அழுத்தமான சூழ்நிலையில் பணியாற்றுதல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் செயற்பாடுகள் போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்தன. இரண்டாம் பிரிவில் வினா விடை போட்டியாக இடம்பெற்றிருந்ததுடன், பொது அறிவு, செய்திகள் மற்றும் தற்போதைய விவகாரங்கள், விளையாட்டு, வரலாறு மற்றும் கலை மற்றும் களியாட்டம் போன்ற விடயங்கள் குறித்த வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. 40 பாடசாலைகளைச் சேர்ந்த 62 அணிகள் ஆரம்ப சுற்றில் பங்கேற்றிருந்ததுடன், 25 அணிகள் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.
விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்த போட்டியின் இறுதியில், கொழும்பு ஆனந்த கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்ததுடன், கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி மற்றும் கொழும்பு மியுசியஸ் கல்லூரி ஆகியன இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றுக் கொண்டன.
ஆரம்ப சுற்றில் விசேட பேச்சாளராக பங்கேற்றிருந்த நெஸ்லே லங்கா பிஎல்சி நிறுவனத்தின் மனித வளங்கள் பிரிவின் ஆட்சேர்ப்பு முகாமையாளர் குமார கல்ஹேன்கே கருத்து தெரிவிக்கையில், வாய் மூலமல்லாத தொடர்பாடலின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். மாபெரும் இறுதி போட்டியின் விசேட அதிதியாக கலந்து கொண்ட, மெட்ரோபொலிடன் கம்பியுட்டர்ஸ் பிரைவேற் லிமிடெட் உதவி பொது முகாமையாளர் சமிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், மாணவர்களுக்கு எதிர்காலத்தில் ஆளுமைகள் வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்து விளக்கமளித்திருந்தார்.
இந்நிகழ்வு தொடர்பில் SLIIT இன் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சந்தன பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'பாடசாலை மாணவர்களுக்காக நாம் வருடாந்தம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறோம். இதன் மூலம் அவர்களின் ஆளுமைகளை மேம்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருப்பதுடன், வௌ;வேறு பிரிவுகளில் அவர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது, எம்முடன் இணைந்து இந்த போட்டியை முன்னெடுக்க எமக்கு அனுசரணை வழங்கியிருந்த மெட்ரோபொலிடன் கம்பியுட்டர்ஸ் பிரைவேற் லிமிடெட் மற்றும் நெஸ்லே லங்கா பிஎல்சி ஆகியவற்றுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
19 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago