2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய டியுப் நிரப்பும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ள கெமா பார்மசியூட்டிகல்ஸ்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெமா பார்மசியூட்டிகல்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனம் மடபாத்த வீதி, பிலியந்தலையில் அமைந்துள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையில் புதிய தன்னியக்க கிறீம் மற்றும் ஒயின்ட்மென்ட் டியுப் நிரப்பும் இயந்திரத்தை நிறுவியுள்ளது. இந்த நவீன இயந்திரத்தை கெமா பார்மசியூட்டிகல்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. கலன ஹேவமல்லிகா அண்மையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.

இத்தாலிய நாட்டு தயாரிப்பான இந்த IMA C960 இயந்திரம் மணித்தியாலத்தில் 3600 டியுப்கள் வரை நிரப்பும் திறனை கொண்டுள்ளது.

தொழிலாளர்களுக்கும் சூழலுக்கும் நட்புறவான இந்த இயந்திரத்தின் வடிவமைப்பு WHO GMP தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் இவ்வியந்திரம் கெமா பார்மசியூட்டிகல்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் கிறீம் மற்றும் ஒயின்ட்மென்ட் உற்பத்தியை மாதமொன்றில் 200,000 டியுப்கள் வரை அதிகரிப்பதுடன், தேசத்துக்கு சிறந்த தரம் வாய்ந்த மருந்துசார் பொருள் (medicinal product) தயாரிப்புகளை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X