Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 03 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதற்தர மூலிகை அழகுச்சாதன வர்த்தக நாமமான நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஏற்பாடு செய்த 'நீயும்-நானும் ஃ வுழரச ழக சுழஅயnஉந'எனப்படும் 'அழகிய கடலில் விநோத சவாரி' செயற்றிட்டம் வெற்றிகரமாக அண்மையில் நிறைவடைந்தது.
இம்முறை கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினம் மற்றும் காதலர் தினத்துக்கு இணைவாகவே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய நேச்;சர்ஸ் சீக்ரட்ஸின் அன்பார்ந்த பாவனையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து 60 ஜோடியினருக்கு கடல் சவாரி செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஜோடியினருக்கு வயது வேறுபாடின்றி, விவாகமானவர், விவாகமானவரல்ல என்ற வேறுபாடின்றி குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குஇந்த போட்டியில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமை விசேட அம்சமாகும்.
இச்சவாரிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 60 ஜோடியினரும் பல்வேறு வயதுப் பிரிவை சேர்ந்தவர்களாவர். இலங்கையின் தூரப்பிரதேசமான அனுராதபுரம்,பொலன்னறுவை, மொனராகலை, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பலர்பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் இவர்கள் ஆழ்கடலுக்கு அழைத்து செல்லப்பட்டு 5 மணித்தியாலயங்கள் வரைவிநோதமாக தமது பொழுதை கழிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. காலி தெற்கு கடற்படை முகாம் தலைமையகத்திலிருந்து ஆரம்பமான இப்பயணம், ஆழ்கடலில் அழகிய டொல்பின்களை மிக அருகில் சென்று பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது. அத்துடன் இராட்சத திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான அரிய சந்தர்ப்பத்தை ஜோடிகளுக்கு வழங்கியதுடன்,அவற்றை புகைப்படம் எடுத்து மகிழவும் அவர்கள் தவறவில்லை.
இந்த கப்பல் சவாரியை ஒருபோதும் தாம் மறக்க போவதில்லை என்றும் இது புது அனுபவத்தை தமக்கு வழங்கியதாகவும் தெரிவித்த ஜோடியினர், இச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நிறுவனத்திற்கு தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago