2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சினய்டர் இலெக்ரிக் உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள சியோகா

A.P.Mathan   / 2015 மே 03 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒளியூட்டல் கட்டுப்படுத்தல் தீர்வுகளை விநியோகிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சினய்டர் இலெக்ரிக் நிறுவனத்துடன் சியோகா பிரைவேற் லிமிடெட் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

சியோகா, தனது பொறியியல் பிரிவின் ஊடாக முன்னணி நிபுணத்துவ ஒளியூட்டல் தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையின் மூலமாக, சியோகா நிறுவனத்தின் நிபுணத்துவம் வாய்ந்த ஒளியூட்டல் மற்றும் ஒளியூட்டல் கட்டுப்படுத்தல் தீர்வுகளை குடிமனைகள், விருந்தோம்பல், வணிக மற்றும் தொழிற்துறைகளுக்கு ஒரே கூரையின் கீழ் பரிபூரணமாக வழங்கக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சியோகா பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் நிபுணத்துவம் வாய்ந்த ஒளியூட்டல் பிரிவின் பொது முகாமையாளர் ஹரேந்திர ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், 'சியோகாவை பொறுத்தமட்டில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகும். சியோகா தற்போது ஒளியூட்டல் மற்றும் ஒளியூட்டல் கட்டுப்படுத்தல் கட்டமைப்பு தீர்வுகளை வழங்கக்கூடிய நிலைக்கு உயர்ந்துள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு பரிபூரண தீர்வுகளை இதன் மூலம் வழங்க முடியும். இந்த உடன்படிக்கையின் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவுள்ளது, அத்துடன் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் பங்காளருடன் இணைந்துள்ளதன் மூலமாக எமது தீர்வுகளை மேலும் விரிவடையச் செய்து கொள்ளலாம்' என்றார்.

சினய்டர் இலெக்ரிக் நிறுவனத்தின் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கான முகாமையாளர் பிரதீப் சைகியா கருத்து தெரிவிக்கையில், 'தீர்வுகளை வழங்குவதற்காக நாம் யாருடன் இணைந்து செயலாற்றுகிறோம் என்பது தொடர்பில் அதிகளவு கரிசனை செலுத்துகிறோம். வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய பங்காளர்களை நாம் எதிர்பார்க்கிறோம். சியோகா உடன் நாம் கைகோர்த்துள்ளமை, பெறுமதி விநியோகத்தின் மாபெரும் பகுதியாக அமைந்துள்ளது' என்றார். 

சியோகா இயலுமைகள் தொடர்பில் சைகியா கருத்து தெரிவிக்கையில் 'எமது சகல விதமான உயர் தொழில்நுட்ப தீர்வுகள் நாளாந்தம் பயன்படுத்தக்கூடிய தீர்வுகளாக மாற்றப்படக்கூடிய வகையில் செயலாற்றும் பங்காளர்களுடன் நாம் செயற்படுகிறோம். அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம், அறிவு மற்றும் தாபிப்பு செயற்பாடுகளுக்காக உதவும் வகையில் வளங்களின் பகிர்வு போன்றன முக்கியத்துவம் பெறுகின்றன' என்றார்.

நிபுணத்துவம் வாய்ந்த ஒளியூட்டல் துறையில் தனது ஈடுபாட்டை உறுதி செய்யும் வகையில், சியோகா என்ஜினியரிங் தனது முதலாவது ஒப்பந்தத்தை அண்மையில் பெற்றுக் கொண்டது. இலங்கையின் முன்னணி பொது ஒப்பந்தக்காரரான இன்டர்நஷனல் கொன்ஸ்ரக்ஷன் கொன்சோர்டியம் (பிரைவேற்) லிமிடெட், சியோகா என்ஜினியரிங் நிறுவனத்துக்கு சினய்டர் எலக்ரிக் அறை கட்டுப்பட்டு கட்டமைப்பை யால பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சொகுசு ஹோட்டலுக்கு விநியோகித்து தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. 

தமது புதிய ஒளியூட்டல் தீர்வுகளின் மூலமாக, மதிநுட்பமான அலங்காரம் மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சியோகா தற்போது கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் வினைத்திறன் வாய்ந்த ஒளியூட்டல் தீர்வுகளை வழங்கக்கூடிய நிலையை எய்தியுள்ளது. இதற்குமேலாக, வலுப்பாவனை மற்றும் தொழிற்பாட்டு செலவீனம் ஆகியவற்றை குறைக்கக்கூடிய நிலையையும் பெற்றுள்ளது.

ஜயசூரிய தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'நாம் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த தீர்வுகளை வழங்குகிறோம். இல்லம், வியாபார கட்டடம் அல்லது ஹோட்டல் போன்ற எந்தவொரு நிர்மாணத்திலும் வலுப் பாவனையை குறைப்பது மற்றும் சரியான அளவில் வலுவை கட்டடம் முழுவதும் விநியோகிப்பது என்பது இதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்' என்றார்.

சினய்டர் நிறுவனத்தின் C-Bus கட்டுப்படுத்தல் கட்டமைப்புகளை சியோகா தற்போது விநியோகிக்கிறது. ஒளியூட்டல் தன்னியக்கத்துறையில் பரிபூரணமான வலுச்சேமிப்பு கட்டமைப்பாக கருதப்படும் C-Bus கட்டமைப்பின் மூலமாக அறைகளில் நபர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் தன்னியக்கமான விளக்குகளை அணைத்துவிடுவதன் மூலமாக அல்லது இயற்கை பகல் வெளிச்சம் காணப்படும் சந்தர்ப்பங்களில் மின்குமிழ்கள் ஒளிர்வதை குறைந்து 50 சதவீதம் வரை ஒளியூட்டல் வலுவை குறைத்துக் கொள்ள உதவுகின்றன. 

ஏற்கனவே தாபிக்கப்பட்ட கட்டடத்துக்கு தகுந்த ஒளி கட்டுப்படுத்தல் கட்டமைப்பை நிறுவுவது என்பது சியோகாவினால் வழங்கப்படும் மற்றுமொரு தீர்வாக அமைந்துள்ளது. சினய்டரின் பின்மாற்றியமைப்பு கட்டமைப்புகள் மூலமாக அறிவுபூர்வமான ஒளி கட்டுப்பாட்டு உள்ளடக்கங்களை வரையறைகளின்றி ஏற்கனவே காணப்படும் ஒளியூட்டல் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள முடியும். குடியிருப்பு சார்ந்த தேவைகளுக்கு பொருத்தமானதாக அமைந்திருப்பதுடன், வீட்டு உரிமையாளர்கள் தற்போது ஒளியூட்டல் கட்டுப்பாட்டு கட்டமைப்பு மூலம் தடங்கல்களை குறைத்து, வலுப்பாவனையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களின் பிரத்தியேகமான வலுத்தேவைகளை புரிந்து கொண்டு நிவர்த்தி செய்யும் தமது செயலணியினரின் இயலுமை தொடர்பில் ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், 'வாடிக்கையாளர்களின் தேவைக்கமைய அவசியமான மாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய உள்ளக அணியினரை நாம் கொண்டுள்ளோம். சகல விதமான ஒளியூட்டல் கட்டுப்பாட்டு கட்டமைப்பு செயற்பாடுகளையும் கையாளக்கூடிய வகையில் எமது நிபுணர்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

சியோகா என்ஜினியரிங் என்பது வீதி மற்றும் கட்டட நிர்மாணத்துறை, நீர் சுத்திகரிப்பு, வடிகால் கட்டமைப்பு தாபிப்பு, பாலங்கள் அமைத்தல், நீர் கசிவுகளை தடுத்தல் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஒளியூட்டல் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது. இலங்கையில் ஒளியூட்டல் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியான நிபுணராக சியோகாவின் ஒளியூட்டல் பிரிவு காணப்படுகிறது. 

இப்பிரிவின் பொறியியலாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் உலகின் பிரபல்யம் வாய்ந்த luminaire உற்பத்தியாளர்கள், வலுச்சிக்கன சாதனம் உற்பத்தியாளர்கள் மற்றும் ஒளியூட்டல் கட்டுப்படுத்தல் சாதனம் உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் கைகோர்த்து செயற்படுகின்றனர். இதன் மூலமாக செலவீனம் குறைந்த ஒளியூட்டல் தீர்வுகளை வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கமைய வழங்கி வருகின்றனர். ஆலோசகர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டடக் கலைஞர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் டிவலபர்கள் ஆகியோருடன் சியோகா என்ஜினியரிங் இணைந்து செயலாற்றுவதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்தளவு சேவையை வழங்குகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X