2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

HRM விருது விழாவில் வெள்ளி விருதை வென்றெடுத்த CDB

A.P.Mathan   / 2015 மே 07 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித வள வல்லுனர்கள் சங்கமானது SHRM உடன் இணைந்து நடத்திய HRM விருதுகள்-2014 விழாவில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் நிறுவனம் (CDB) ஒட்டுமொத்த வெள்ளி விருதினை வென்றெடுத்துள்ளது.

CDB நிறுவனமானது ஆற்றல் மிக்க குழுவினரின் மேம்படுத்தல்களுடன், கடந்த 20 ஆண்டுகளாக சக்திமிக்க முன்னோடியாக விளங்குகிறது. புதுமையான உற்பத்தி வரிசைகள் மற்றும் நிதித்தீர்வுகளை வழங்கி வரும் CDB ஆனது அதன் சிறந்த மனிதவள முகாமைத்துவ நடைமுறைகளுக்கான பன்முக நிறுவனமாகத் தொடர்ந்து பல விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இவ் விருதினை வென்றமையானது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதுடன், இவ் விருதானது எமது மக்களுக்குச் சொந்தமானது' என CDB இன் பணிப்பாளரும்/ பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான ரொஷான் அபேகுணவர்தன தெரிவித்தார். 'CDB நிறுவனத்தில் பெறுமதிகளை மேம்படுத்தல் மற்றும் நெருங்கிய ஈடுபாட்டினை ஊக்குவிப்பது ஆகியவை வலியுறுத்தப்படுவதுடன், பேரார்வத்துடன் செயல்திறனை கடைபிடித்து வருகின்றோம். எமது நிறுவனத்தின் அடித்தளமாக நாம் கட்டியெழுப்பிய HRCAP (மனிதநேயம், தொடர்புகள், ஆற்றல், அபிலாஷைகள் மற்றும் செயல்திறன்) என நிறுவனத்தினுள் பொதுவாக அறியப்படும் அடிப்படை மனிதவள பெறுமதிகள் மீது நாம் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த மூலோபாய திட்டங்கள் எமது ஊழியர்களை தொழில் மற்றும் தனிப்பட்ட ரீதியாக விருத்தியடையச் செய்து நிறுவனத்தின் நோக்கங்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய திறன்மிக்க ஊழியர்களாக அவர்கள் உருவாக்கப்படுவதை உறுதி செய்கிறது' என மேலும் அவர் தெரிவித்தார்.

நிதித் தீர்வுகள் துறையில் புதிய நிறுவனமாக உள்ள CDB ஆனது இக்கட்டான நேரங்களிலும் கூட அதன் விவேகம் மற்றும் ஆற்றல் மிக்க தகுதிகளுடன் உறுதியான கூட்டாண்மை நிறுவனமாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டது. சமநிலையான விவேகம் மற்றும் ஆற்றல் ஆகியவையே கடந்த காலங்களில் CDB இன் வர்த்தக வெற்றிக்கு காரணமாகும். பன்முக சூழலுடன் துடிப்பான அணியே CDB இன் விரைவான வளர்ச்சிக்கு பொறுப்பாகவுள்ளது. எமது மக்கள் மத்தியில் பன்முக தலைமுறைகள், கலாச்சாரங்கள், பெறுமதிகள் மற்றும் நம்பிக்கைகள் காணப்படுவதுடன், எமது மக்களுக்கான சரியான கலாச்சாரத்திற்கு பெறுமதி சேர்க்கும் மற்றும் ஊக்குவிக்கும் நிறுவனமாக CDB விளங்குகிறது' என அபேகுணவர்தன தெரிவித்தார்.

மூலங்களை தருவித்தல் மற்றும் தக்கவைத்துக் கொள்ளுதல் ஆகியவையே நிறுவனம் எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாகும். 'இந்த பன்முக கேள்வியானது எமது HR செயல்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்தையும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் செய்ய வழிவகுத்தது. ஏனெனில் எமது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் பொருத்தமான மூலோபாயங்கள் மற்றும்; திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. நாம் எந்நேரமும் சிறப்பாக செயலாற்றுவதற்காக சிறந்த திறன்களை கட்டியெழுப்பக்கூடிய தனிச்சிறப்புமிக்க முறைகளை கையாண்டதுடன், வேலைத்தளத்தை சவால் நிறைந்ததாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமானதாகவும் உருவாக்கி எமது ஊழியர்களை நீண்டகாலம் தக்கவைத்துக் கொண்டுள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.

'இலங்கையில் மிகவும் விரும்பப்படும் தொழில் நிறுவனமாக திகழ்வதற்கான நோக்கத்தை கொண்டுள்ள CDB ஆனது நிச்சயமாக நீண்டகாலம் தொழில் புரிய விரும்பும் தேர்வாளர்களுக்கு சிறந்த தெரிவாக அமையும். எமது நிறுவனத்தில் புதிதாக இணைந்து கொள்ளும் பட்டதாரிகள் மற்றும் பாடசாலையை பூர்த்தி செய்தவர்களுக்கு நாம் வாய்ப்புகள் மற்றும் சவால்களை வழங்குவதுடன், எமது நிறுவனத்தின் எதிர்கால தலைவர்களாக உருவாக்குவதற்காக அவர்களை மேம்படுத்தி வருகின்றோம். நஷ்டஈடு மற்றும் அனுகூலங்களைத் தவிர்ந்து, ஊழியர்களின் உடல் மற்றும் உள ரீதியான நலன் தொடர்பான எமது அர்ப்பணிப்பானது, உயர் ஊழியர் ஈடுபாட்டின் மதிப்பீடுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு எம்மை சிறந்த வேலை வழங்குநராக நிலைநாட்டியுள்ளது' என அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

'எமது மக்களின் வெற்றி மீதான எமது மூலோபாய விளைவுகள் காரணமாகவே நாம் வெள்ளி விருதை வென்றெடுத்தோம். HR ஆனது நிறுவன மூலோபாயங்களுடன் சீரமைக்கப்பட்டுள்ள செயற்பாடே என்பது CDB இன் நம்பிக்கையாகும். மக்களுக்கு சவால் விடுக்கும் அதேவேளை அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தக்கூடிய கடின செயல்பாட்டு நிர்வாகம் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எமது நிறுவனத்தின் வர்த்தக முயற்சிகளுக்கு ஆதரவும், வணிக தேவைகளை நன்குணர்ந்துள்ள ஆற்றல் மிக்க HR அணியினர் இல்லையென்றால் நிச்சயமாக இந்த வெற்றி சாத்தியமில்லை' என அபேகுணவர்தன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X