2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நீண்டகால நடவடிக்கைகளை முன்னெடுத்த சன்ஷைன் ஹெல்த்கெயார்

A.P.Mathan   / 2015 மே 07 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் சுகாதார பராமரிப்பு சந்தைப்படுத்தல் நிறுவனமும், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமுமான சன்ஷைன் ஹெல்த்கெயார் லிமிடெட் (SHL) நிறுவனமானது ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான சுகாதார பராமரிப்புகள் வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகிறது.

1948ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலக சுகாதார அமைப்பு ஆண்டு நிறைவை நினைவுகூறும் அதேவேளை ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு; சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனமானது தொடர்ந்து ஆண்டு முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாம் சதாசிவம் கருத்து தெரிவிக்கையில் 'நல்வாழ்வு என்பதை சுகாதாரம் முதல் மகிழ்ச்சி வரையான பயணமாக நாம் வரையறுக்கிறோம். எமது பங்காளார்கள் ஊடாக மற்றும் எமது வேலைத்தளம் ஊடாக நாட்டின் ஒவ்வொருவருக்கும் செயற்திறன் மிக்க சுகாதார பராமரிப்புகள் கொண்டு செல்வதுடன், எமது உற்பத்திகள் மற்றும் தீர்வுகளுடன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்' என்றார்.

இலங்கையின் சுகாதார பராமரிப்பு சந்தையில் முக்கிய பங்குதாரராக விளங்கும் சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனமானது சுகாதாரம் சார்ந்த சமூக திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. வளங்கள், நிபுணத்துவம் மற்றும் உறுதியான வலையமைப்புக்களை விஸ்தரித்துள்ள SHL ஆனது ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுத்த பல்வேறு திட்டங்கள் ஊடாக சமூகங்களுக்கு அனுகூலங்களும், ஆரோக்கியமான வாழ்வையும் ஊக்குவித்துள்ளது.

SHL இன் இலக்கான கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியத்தின் தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். சமீபத்தில் புளத்சிங்கள பிரதேசத்தில் 200 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் தந்தையருக்கு முழு நாள் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த செயலமர்வுகளை ஏற்பாடு செய்வதற்கான உதவிகள் பிரதேச சுகாதார அமைச்சு அதிகாரி (MOH) மூலம் வழங்கப்பட்டிருந்தன. சுகாதார பரிசோதனைகள் மற்றும் மேலதிக ஊட்டச்சத்து அறிவுரைகளைத் தொடர்ந்து ஊட்டச்சத்து மற்றும் பொருத்தமான உணவு பரிந்துரைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன.

'இத் திட்டம் தாய்மார்களுக்கு ஊட்டமளிப்பது சம்பந்தமானது. சுகாதார செயலமர்வுகள் ஊடாக பெண்களுக்கு அனுகூலங்களை வழங்குதலானது எமது சமூகத்திற்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் பெரிதும் பயனுடையதாக அமையும். இத்தகைய திட்டங்களை தொடர்ந்து நாம் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்' என Mama Plus இன் வர்த்தகநாம முகாமையாளர் விந்தியா மென்டிஸ் தெரிவித்தார்.

சன்ஷைன் ஹெல்த்கெயார் லிமிடெட் நிறுவனமானது எப்போதும் சமூகங்கள் மத்தியில் ஆரோக்கியமான சூழலை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப் பிரதேசத்திலுள்ள குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சமூகத்தினரின் நலனுக்காக பல்வேறு சுகாதார மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பங்குபற்றுநர்களின் தனிப்பட்ட நல்வாழ்வினை மேம்படுத்தும் குறிக்கோளுடன் கண்டி பிரதேசத்தில் மாத்திரம் 20 இற்கும் மேற்பட்ட முகாம்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செயலமர்வுகளில் வைத்தியர்கள் மூலம் ஊட்டச்சத்து அறிவுரைகள் மற்றும் முறையான உடற்பயிற்சி தொடர்பில் பங்குபற்றுநர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை விருத்தி மற்றும் இலவச மருத்துவ பரிசோதனைகள் போன்றன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு செயலமர்வு மூலமாகவும் 100-200 வரையான பங்குபற்றுநர்கள் அனுகூலங்களை பெற்றிருந்தனர்.

'தங்கள் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையானவை எவை என்பது தொடர்பில் பங்குபற்றுநர்கள் புரிந்து கொண்டனர்' என Enlive இன் வர்த்தகநாம முகாமையாளர் ஆலோக பெரேரா தெரிவித்தார். 'இத்தகைய நிகழ்வுகளில் ஒருவரது வாழ்வின் தரத்தை மேம்படுத்துவதற்காக மருத்துவர்கள் மூலம் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன' என மேலும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு வசதிகள் அற்ற கிராமிய சமூகத்தினர் பெரிதும் பயனடைந்தனர். இந்த முகாம்களில் பங்குபற்றிய ஊட்டச்சத்து நிபுணர்கள் மூலம் சிறந்த வாழ்க்கைமுறைக்கான மேலதிக ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.

SHL ஆனது ஆண்டு முழுவதும் சிறந்த சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளும் வகையில் நிறுவனத்தினுள்ளேயும் நல்வாழ்வு ஊக்குவிப்புக்களை முன்னெடுத்திருந்தது. இந் நிறுவனமானது அதன் அனைத்து ஊழியர்களும் இலவச பரிசோதனைகள் மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை பெறும் வகையில் 'சக்கரையற்ற தினம்' இனை பிரகடனப்படுத்தியது.

நான்கு தசாப்த கால நம்பிக்கையை கொண்டாடும் சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனமானது இலங்கையின் சுகாதார பராமரிப்பு துறையில் ஓர் உந்து சக்தியாக திகழ்கிறது. SHL இன் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை கொண்ட குழுவினர் புத்தாக்கம், விடாமுயற்சி, நம்பிக்கை, பொறுப்பு மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் செயற்படுகின்றனர். SHL ஆனது பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையின் சுகாதார பராமரிப்பு துறைக்கு மருத்துவ, அறுவை சிகிச்சைகள், நோய் கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் போன்ற தீர்வுகளை வழங்கி வருகின்றது. SHL இன் உறுதியான பங்காண்மை, நிபுணத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு தொடர்பான ஆர்வம் ஆகியன சமூகத்தினை மாற்றியமைக்கும் கருவியாக செயற்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X