2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கதயமொட்ட சிங்கள வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம்

A.P.Mathan   / 2015 மே 11 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் அதன் 'பரிகனக பியஸ' சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மதுரங்குலிய பிரதேசத்தைச் சேர்ந்த கதயமொட்ட சிங்கள வித்தியாலயத்திற்கு புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை வழங்கியுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதே CDB பரிகனக பியச திட்டத்தின் குறிக்கோளாக அமைந்துள்ளது. 1.2 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியை கொண்ட இத் திட்டமானது CDB நிறுவனத்தின் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட 8 ஆவது ஆய்வுகூடமாகும். 

இந் நிகழ்வில் IT பிரிவின் பிரதி பொது முகாமையாளர் இம்டாட் நகுய்ப் மற்றும் CDB இன் சிரேஷ்ட அங்கத்தவர்கள் இணைந்து IT ஆய்வுகூடத்தை பாடசாலை வசம் ஒப்படைத்தனர். இந்த தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடமானது HP கணினிகள், LCD monitors, printers, எழுதுபொருள், ஸ்கேனர்கள்இ கணினி மேசைகள், கதிரைகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் ADSL இணைய வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் தமது நன்றியை தெரிவித்துக்கொண்ட கதயமொட்ட சிங்கள வித்தியாலயத்தின உப அதிபர் லெஸ்லி, 'இன்றைய கல்வியின் முக்கிய அங்கமாக IT அறிவு மாற்றமடைந்துள்ளது. இன்று வரை எமது பாடசாலை மாணவர்கள் இணைய வசதிகளின்றி காணப்பட்டனர். எமது மாணவர்களுக்கு இந்த வசதியை செய்து கொடுத்த CDB இற்கு எமது நன்றிகள். எமது பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த மதுரங்குலிய சமூகத்தினரும் பயனடைக்கூடிய வகையிலான நன்கொடையை வழங்கிய CDB இன் பெருந்தன்மைக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்' என்றார். 

இந் நிகழ்வில் IT பிரிவின் பிரதி பொது முகாமையாளர் இம்டாட் நகுய்ப் கருத்து தெரிவிக்கையில், 'நாடு முழுவதும் IT அறிவினை மேம்படுத்தும் நோக்கத்தின் ஓர் அங்கமாக நாம் முன்னெடுத்துள்ள 8ஆவது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திட்டம் இதுவாகும். பணியிடத்தில் சிறப்பாக செயலாற்ற IT திறன்கள் அத்தியாவசியமாகும்' என்றார்.

'இளைஞர்கள் தமது தொழிலை வலுப்படுத்திக் கொள்ளக்கூடிய திறன்களை வழங்குவது தொடர்பில் எமது CSR திட்டங்கள் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த பரிகனக பியச திட்டத்தின் ஊடாக பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தமது பணியிடத்தில் சிறப்பாக  பணியாற்றுவதற்கு தேவையான மனப்பான்மையை வழங்கக்கூடிய வகையில் IT கல்வியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். உள்நாட்டு சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் ரீதியில் நாம் இதனை முன்னெடுத்து வருகிறோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.

எமது நிறுவனத்தின் கடந்தகால வெற்றியில் CSR திட்டங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. CDB இன் பரிகனக பியச ஆய்வுகூட நன்கொடைகள் தற்போதைய CDB திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தேசியளவில் IT அறிவினை மேம்படுத்தும் நோக்கத்தின் ஓர் அங்கமாக, CDB ஆனது எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இத்தகைய திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X