2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புரட்சியை ஏற்படுத்தியுள்ள CBLஇன் 'Nutriline'

A.P.Mathan   / 2015 மே 17 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிஸ்கட் மற்றும் இனிப்பு சந்தையில் முன்னோடியான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனம் பல்வேறு தானியங்களின் போசாக்கினை ஒன்றிணைத்து சுவையானதும், ஆரோக்கியமானதுமான காலையுணவு ஆகாரமாக Nutriline (நியூட்ரிலைன்) சீரியல் தெரிவுகளை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. பரபரப்பான வாழ்க்கை காரணமாக இலங்கையில் 75% வீதமான சிறுவர்கள் காலையுணவு உட்கொள்வதை தவிர்த்து வருவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு தீர்வாக காலையுணவை சௌகரியமாகவும், சுவாரஸ்யமாகவும் உருவாக்கும் வகையில் CBL நிறுவனம் இந்த புதிய உற்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோதுமை, சோயா, அரிசி, சோளம் மற்றும் பயறு போன்ற ஐந்து தானிய வகைகளின் போசாக்கினை உள்ளடக்கிய Nutriline ஆனது 5 வயதுக்குக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தமானது. நடுவில் சொக்லட்டினால் நிரப்பப்பட்டுள்ள இவ்வுற்பத்தியில் எந்தவிதமான செயற்கை வர்ணங்களோ, சேர்மானங்களோ அல்லது சுவையூட்டிகளோ சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'குழந்தைகளுக்கு அவர்களது சிறுபராயத்திலேயே தேவையான போசாக்கினை சரியான முறையில் வழங்கி ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே எமது குறிக்கோளாகும். தற்போதைய தானிய ஆகார சந்தையானது இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்திகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. Nutriline ஆனது சர்வதேச தரங்களுக்கு அமைவாக இருந்தாலும், இந்நாட்டு நுகர்வோருக்கு சகாயமான விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவரும், குழும பணிபாளருமான நந்தன விக்ரமகே தெரிவித்தார்.

இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள Nutriline இல் 11 விற்றமின்கள் மற்றும் கனியுப்புகள் உள்ளடங்கியுள்ளதுடன், 100% தாவரங்களிலிருந்தான இவ்வுற்பத்தியை CBL இன் துணை நிறுவனமான கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ்(லங்கா) பிஎல்சி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

'கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ் நிறுவனம் என்பது எந்நேரமும் தமது வாடிக்கையாளருக்கு நம்பிக்கை வாய்ந்த உற்பத்தியை வழங்குவதற்காக செயற்பட்டு வரும் நிறுவனமாகும். இதன் காரணமாகவே உள்நாட்டில் விளையும் தானியங்களை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கிணையான காலையுணவு சீரியல் வகைகளை அறிமுகம் செய்ய நாம் எண்ணினோம். இந்த உற்பத்தியானது விவசாயிகளிடமிருந்து பெறும் மூலப்பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதுடன், அவர்களது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த எம்மால் முடிந்துள்ளது' என கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ்(லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலங்க டி சொய்சா தெரிவித்தார்.

நம்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் செயற்திறனுக்கு ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கங்கள் கட்டாயமாகும் என்பதில் கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே, இளம் குழந்தைகளுக்கு சீரான காலையுணவை வழங்கி ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டினை நிறுவனம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

கவர்ச்சியான பொதிகளில் கிடைக்கும் Nutriline இன் 3 தெரிவுகள் சந்தையில் விற்பனைக்குள்ளன. தானியங்கள் மற்றும் விற்றமின்களால் உருவாக்கப்பட்ட சீரியல் சிப்ஸ் வகையாக Choco Chips உள்ளது. கோதுமை, சோயா, அரிசி, சோளம் மற்றும் பச்சைப்பயறு போன்ற முழு தானியங்களுடன் நடுவில் சொக்லட் நிறைந்த சுவைமிக்க சீரியல் வகையாக Choco Grains அமைந்துள்ளது. Choco Blobs என்பது நடுவில் சொக்லட் கொண்ட சீரியல் வகையாகும். இந்த மூன்று தெரிவுகளும் 100 கிராம் பக்கற்றுக்களில் சகாயமான விலையில் கிடைக்கின்றன.

'Nutriline உற்பத்திக்கான சந்தை ஆராய்ச்சி, விபரங்கள் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் அடைவு, உற்பத்தி சோதனை, நுகர்வோர் மாதிரி மற்றும் பொதியிடல் போன்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயல்பாடுகளுக்காக ஓராண்டு செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது' என கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ்(லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் தர நிர்ணயம் மற்றும் R&D முகாமையாளர் மாலா ரணதுங்க தெரிவித்தார்.

'Nutriline உற்பத்தி செயல்பாடுகளின் போது சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் தர ஆய்வு போன்றவற்றை நாம் பின்பற்றுகின்றோம். உற்பத்திக்கான மூலப்பொருட்கள் பதிவு செய்யப்பட்ட சப்ளையர்களிடமிருந்து மாத்திரம் பெறப்படுவதுடன், அனைத்து மூலப்பொருட்களும் எமது உள்ளக ஆய்வுகூடத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளின் பின்னரே உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தி மற்றும் பொதியிடல் செயற்பாடுகள் தன்னியக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன. இறுதியாக எமது தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் உற்பத்தியின் போசாக்குத்தன்மை மேலும் உறுதி செய்யப்படுகிறது' என ரணதுங்க மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X