Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 11 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வீதிகளில் பெண்கள் அதிகளவு வாகனங்கள் செலுத்துவதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. பெண்களுக்கு பொருத்தமான வாகனங்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம்.
'paint it pink and it will sell' எனும் யுகம் தற்போது மாற்றமடைந்து வருவதுடன், விரைவில் முற்றாக மாற்றமடைந்துவிடும் நிலையை எய்தியுள்ளது. கார் வர்த்தக நாமங்கள் பெண்களை கவரும் வகையில் பெருமளவு தொகை பணத்தை செலவிடுகின்றன. ஹொண்டா அண்மையில் முன்னெடுததிருந்த 'She’s pretty in pink' எனும் விளம்பர பிரச்சார திட்டம் அனைவரும் நினைவில் இருக்கும். இது போன்ற முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை. அப்படியென்றால், புதிதாக என்ன முன்னெடுக்கப்படுகிறது? ஒன்லைனில் கார்களை விற்கவும் வாங்கவும் சிறந்த பகுதியாக Carmudi அமைந்துள்ளது. இருபாலாருக்கும் பொருத்தமான கார்கள் முதல், பெண்களுக்கென விசேடமாக அமைந்த கார்கள் வரை காணப்படுகின்றன.
பெண்களுக்கு விசேடமாக அமைந்த கார் விநியோகம்
புதிய ஆய்வுகளுக்கமைவாக, ஐந்தில் ஒரு பெண், கார்கள் பற்றிய பயிற்சிப்பட்டறைகளை தவிர்க்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. ஏன்? 22 சதவீதமான பெண்கள் இந்த சூழல் தமக்கு பொருத்தமற்றதாக கருதுகின்றனர். 28 வீதமான பெண்கள் தாம் தொழில்நுட்ப ரீதியான வினாக்களை கேட்பதற்கு பயப்படுவதாக குறிப்பிட்டிருந்தனர். வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் அடைமொழிகள் தம்மை பெரிதும் அசௌகர்யத்துக்கு உட்படுத்துவதாக 31 சதவீதமான பெண்கள் தெரிவித்திருந்தனர். Toyota வை பொறுத்தமட்டில், கார் ஒன்றை வாங்குவது என்பதன் அனுபவம், வாகனத்தைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இரு பாலாருக்கும் பொருந்தும் வகையில் விற்பனை சூழலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் Toyota பல்கலைக்கழகத்தின் மூலமாக விநியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே, பெருமளவான பெண்கள் Toyota சான்றளிக்கப்பட்ட பயன்படுத்திய வாகனங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்துகின்றனர். Nissan தனது 'lady first' திட்டத்துக்கமைய ஜப்பானிலுள்ள தனது 300க்கும் அதிகமான விநியோகத்தர்களை மெருகேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெண்களை விசேட இலக்காக கொண்டு சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே Nissan தனது 'lady first' விநியோக கட்டமைப்பை டோக்கியோவின் அருகிலுள்ள நகரான ஃபூச்சு பகுதியில் ஆரம்பித்துள்ளது.
புதிய வர்த்தக திட்டத்துடன் பெண்களை இலக்கு வைக்கும் OEM
பெண்கள் மத்தியில் சமூக இணையத்தளங்கள் அதிகளவு பிரல்யமடைந்து காணப்படுகின்றமையால், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சிறந்த பகுதியாக இது அமைந்துள்ளது. Fiat தனது வாகனங்களை இரு பாலாருக்கும் பொருத்தமான வகையில் முழுமையாக மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வசதிகளை வழங்குகிறது. இத்தாலிய கார் வர்த்தக நாமமும் தனது கார் மாதிரிகளுக்கு பொருத்தமான பல தெரிவுகளை வெளியிட்டுள்ளது. இதேவேளை, BMW 30 வயதுக்குட்பட்ட பெருமளவான பெண்கள் சொகுசான கார்களை லீசிங் செய்வதாக நம்புகிறது. எனவே இளம் பெண்களை இலக்காக கொண்டு தனது 'joy' எனும் பிரசார திட்டத்தை முன்னெடுத்திருந்தது. Kia தனது கார்களுக்கு 7 வருட உத்தரவாதத்தை வழங்கியிருந்தது, சலுகை விலையில் சேவை மற்றும் வீதியோர உதவிகள் போன்றனவும் பெண்களை கவரும் வகையில் அமைந்திருந்தன.
பெண்களை இலக்காக கொண்ட கார் மொடல்கள் மற்றும் அவற்றை பரிந்துரைக்கும் பெண்கள்
2014 க்கு முன்னர், Porsche வாகனங்களை கொள்வனவு செய்தவர்களில் பத்தில் எட்டு பேர் ஆண்களாக அமைந்திருந்தனர். 2014 இல் Porsche இனால் 'For Her' எனும் தொனிப்பொருளில் தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இது 600க்கும் அதிகமான மாற்றியமைத்துக் கொள்ளும் உள்ளம்சங்களை கொண்டமைந்திருந்தது. panoramic sunroof மற்றும் உயர்வான இருக்கைகள் போன்றன அதிகளவு கவரும் வகையில் அமைந்திருந்தன. SUVகள் மற்றும் சிறியளவிலான விளையாட்டு ரக கார்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காண்பித்த பெண்களை இலக்காக கொண்டு இந்த Macan அமைந்திருந்ததுடன், மேலும், 'manly' எனும் நிலையை மாற்றியமைக்கும் வகையில் Porsche தனது வர்த்தக நாம தூதுவராக டெனிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவை நியமித்திருந்தது. இதன் பெறுபேறு? 2014 இல் Macan விற்பனையில் 25 சதவீதத்தை பெண்கள் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும், Land Rover Evoque அலங்காரம் மற்றும் பரிந்துரைக்கும் செயற்பாடுகளை விக்டோரியா பெக்கம் முன்னெடுத்திருந்தார். பெண்களுக்கான சிறப்பம்சங்களை கொண்ட முதலாவது Land Rover ரகமாக இது அமைந்திருந்தது.
பெண்களை கவரும் வகையில் அமைந்த சிறிய ரக கார்கள்
பெண்களை கவரும் வகையில், கார் வர்த்தக நாமங்கள், அதிகளவு உள்ளக இட வசதிகளை கொண்டு, சிறந்த மூலப்பொருட்களிலாலான கார்களை தயாரித்து வருகின்றன. சீனாவிலுள்ள பத்து மினி ரக கார் உரிமையாளர்களில் எட்டு பேர் பெண்களாக அமைந்துள்ளனர். ஏன்? 2014 BMW Mini என்பது சுயமாக தரிப்பிட தரிப்பு வசதிகளை கொண்டுள்ளதுடன், தொடு திரையுடன் கூடிய உள்ளம்சங்களையும், கமராவையும் கொண்டுள்ளது. இந்த மாதிரி 4.5அங்குலம் நீளமானது, 1.7 அங்குலம் அகலமானது, 0.3 அங்குலம் உயரமானது. இவை அனைத்தும் பெண்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. 2014 Citroen C1 என்பதும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகளவு பிரத்தியேக அம்சங்களை கொண்டுள்ளதுடன், reverse parking camera மற்றும் 7 அங்குல தொடு திரை என்பவற்றை கொண்டுள்ளது.
Carmudi பற்றி
2013 இல் Carmudi தாபிக்கப்பட்டிருந்தது. தற்போது பங்களாதேஷ், கமரொன், கொங்கோ, கானா, இந்தோனேசியா, ஐவரி கோஸ்ட், மெக்சிகோ, மியன்மார், நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், ருவாண்டா, சவுதி அரேபியா, செனகல், இலங்கை, டன்சேனியா, ஐக்கிய அரபு இராச்சியம், வியட்நாம் மற்றும் சம்பியா போன்ற நாடுகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது. வாகன சந்தையான இதில் விற்பனையாளர்கள், கொள்வனவார்கள் மற்றும் கார் விநியோகத்தர்கள் ஆகியோர் சந்திக்கின்றனர். கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வணிக நோக்கிலமைந்த வாகனங்களை கண்டறிவதற்கு சிறந்த ஒன்லைன் பகுதியாக அமைந்துள்ளது.
23 minute ago
35 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
8 hours ago