2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சமபோஷ 'வசந்த உதானய'

A.P.Mathan   / 2015 மே 23 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகார வர்த்தகநாமமான சமபோஷ ஆனது தொடர்ந்து 8ஆவது ஆண்டாக கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி தலவ முதுனேகம பிரதேசத்தில் 'சமபோஷ வசந்த உதானய' நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. கொவி சதுட்ட செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த சமூக நலன் சார்ந்த நிகழ்வானது பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவற்) லிமிடெட் நிறுவனத்துடன் ஒன்றிணைந்துள்ள பின்தங்கிய விவசாய சமூகத்தினரின் நல்வாழ்வை மேம்படுத்தி வருகிறது.

இந்த வருட 'சமபோஷ வசந்த உதானய' புத்தாண்டு களியாட்டத்தில் கடந்தாண்டினை விட அதிகளவிலானோர் பங்குபற்றியிருந்தனர். இம்முறை இடம்பெற்ற பராம்பரிய புத்தாண்டு விளையாட்டுகளில் 600 இற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த களியாட்டத்திற்கான நிதி அனுசரiணையை சமபோஷ வழங்கியிருந்தது. பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுநல ஆர்வமானது நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, இலங்கையின் விவசாயச் சமூகத்தினரின் நல்வாழ்விலும் ஆதரவு வழங்கிவருவதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வினை விவசாயிகள், விவசாய அமைப்புகள் மற்றும் பிளென்டி ஃபூட்ஸ் (பிரைவற்) லிமிடெட் நிறுவனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்தன.

இந்த புத்தாண்;டு களியாட்ட நிகழ்வில்; ஆண்டு முழுவதும் விவசாயிகள் வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் 'சமபோஷ விவசாய அரசன்' பட்டம் சூட்டப்பட்டமை அனைவரையும் கவர்ந்திருந்தது. தலவ பிரதேசத்தைச் சேர்ந்த கே.ஜி.திலகரத்ன பண்டா அவர்கள் '2015 சமபோஷ விவசாய அரசன்' பட்டத்தை வென்றெடுத்ததுடன், முதுனேகமவைச் சேர்ந்த ஆர்.ஜி.சந்தலால் சந்திரசிறி மற்றும் மஹாவெலிதென்னவைச் சேர்ந்த எச்.ஜி.விஜேசேகர ஆகியோர் முறையே 2ஆம் மற்றும் 3ஆம் இடத்தினை வென்றெடுத்தனர். மேலும் இந் நிகழ்வில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நிலையாண்மைக்கு பங்களிப்பு வழங்கிய மூத்த விவசாயிகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர். இதற்கு முன்னர் இந் நிகழ்வு கிரிஇப்பன்வௌ, எப்பாவல, மகியங்கனை, களென்பின்துனுவௌ, திஸ்ஸமஹாராமய, புலுனேவ மற்றும் மீகாகிவுல  போன்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் ரீதியில், பிளென்டி ஃபூட்ஸ் (பிரைவற்) லிமிடெட் நிறுவனமானது பின்தங்கிய விவசாய சமூகத்தினரின் நல்வாழ்வினை உறுதி செய்து வருகிறது. தேசத்தின் முன்னணி தானிய ஆகாரமான சமபோஷ உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டு விவசாயிகளே வழங்கி வருகின்றனர். நாளாந்தம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் கிராமிய விவசாயிகளுக்கு உந்துசக்தியளிக்கும் வகையில் ஆண்டுதோறும் 'சமபோஷ வசந்த உதானய' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது' என பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும்/ பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன தெரிவித்தார்.

பின் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு  விவசாயிகளிடமிருந்து பெறப்படும் உள்நாட்டில் விளையும் அரிசி, சோயா, சோளம் மற்றும் பச்சைப்பயறு போன்ற தானியங்களை மட்டுமே பயன்படுத்தி சமபோஷ உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந் நிறுவனம் 4GB, On the go மற்றும் Nutri Cereals போன்ற சக்தியளிக்கும் தயாரிப்புகளையும் உற்பத்தி செய்து வருகிறது.

பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகாரமான சமபோஷவின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்குவதற்கு கடினமாக உழைக்கும் தேசத்தின் விவசாய சமூகத்தினரின் முகங்களில் புன்சிரிப்பை உருவாக்கும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வருடாந்த புத்தாண்டு களியாட்ட நிகழ்வாக 'சமபோஷ வசந்த உதானய' அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X