Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 23 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதி பாதுகாப்பு தொடர்பான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம் முன்னோடி வேலைத்திட்டமாக அண்மையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கு விசேட போக்குவரத்து வார்டன் சீருடைகளை வழங்கியிருந்தது.
இந்த போக்குவரத்து வார்டன் சீருடையானது எதிரொலியான நிறங்களினால் உருவாக்கப்பட்டுள்ளதால், மோட்டார் ஒட்டுநர்களினால் சுமார் 50 முதல் 100 அடி தொலைவிலிருந்தும் மற்றும் பனிமூட்டமான காலநிலையின் போதும் கூட போக்குவரத்து வார்டனை தெளிவாக இனங்காணக்கூடியதாக அமைந்துள்ளது. அப் பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள் மற்றும் பொலீஸாருடன் தொடர்பு கொண்டு சமூகத்தின் அவசரத் தேவையினை உணர்ந்து ஜனசக்தி ஊழியர்கள் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர்.
'பெரும்பாலான பாடசாலைகள் பொலிஸாருடன் இணைந்து மஞ்சள் கடவைகளில் தமது மாணவர்களையே போக்குவரத்து வார்டன்களாக ஈடுபடுத்தி வருகிறது. நாம் மாணவர்களுக்கு வழங்கியுள்ள இந்த உடைகள் பிரதிபலிப்பதாகவும், பனிமூட்டத்தின் போதும் கூட அவர்கள் ஓட்டுநர்களுக்கு தெளிவாக தெரிவதை உறுதி செய்கிறது. எனவே இனிமேல் வார்டன்கள் எவ்வித பயமுமின்றி தமது பணியை மேற்கொள்ள முடியும். வார்டன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மத்தியில் கௌரவமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் உத்தியோகபூர்வ உடையை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாக அமைந்திருந்தது' என ஜனசக்தி காப்புறுதியின் வர்த்தகநாம செயல்பாட்டுப் பிரிவின் முகாமையாளர் கெலும் வீரசிங்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் வீதிப் போக்குவரத்து நெரிசல் பொலீஸ் பொறுப்பதிகாரி ஜி.சி.செனவிரத்ன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே ஜனசக்தி இந்த சீரூடையை உருவாக்கியுள்ளது. நுவரெலியா பெண்கள் உயர் கல்லூரி, காமினி மத்திய கல்லூரி, பம்பரகல்ல மத்திய கல்லூரி மற்றும் மீபிலமான மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களுக்கே இந்த உத்தியோகபூர்வ சீருடைகள் வழங்கப்பட்டிருந்தன.
'இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதையிட்டு ஜனசக்தி மிகவும் பெருமையடைகிறது. சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், உள்நாட்டு சமூகத்தினரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். இத் திட்டத்தினூடாக போக்குவரத்து வார்டன்கள் மத்தியில் பெருமைமிக்க உணர்வை உருவாக்கும் வகையிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒளிரும் விளக்கினூடாக எமது வர்த்தக குறியீட்டின் பெறுமதியை பிரதிபலிக்கும் வகையிலும், எமது ஊழியர்களுக்கு மாத்திரமன்றி எமது சுற்றுச்சூழல் மற்றும் எமது சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நாம் நம்புகிறேன்' என பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இத் திட்டத்தினை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்கவும், பாடசாலை அதிபர்கள் மற்றும் பொலீஸாருடன் இணைந்து ஆராய்ச்சிகளையும் ஜனசக்தி முன்னெடுத்து வருகிறது. ஜனசக்தி நிறுவனம் கடந்த காலங்களில் கண்பார்வையற்றோருக்கான பார்வை வசதிகள், சிறுநீரக பரிசோதனை திட்டங்கள் மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் குடிநீரின் தரத்தை மேம்படுத்தல் போன்ற பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு தொடர்ந்து தமது ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
40 minute ago
52 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
8 hours ago