Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 27 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி கண் மற்றும் காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவ சேவை வழங்கும் வைத்தியசாலையாக திகழும் கோல்டன் கீ வைத்தியசாலையானது, CIRRUS HD-3D OCT 5000 Ver. 8.0 என்ற மிகப் பிந்திய பதிப்பிலான இயந்திர சாதனத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது சேவை வழங்கலை மேலும் மேம்படுத்தி இருக்கின்றது. இந்த இயந்திரத்தின் 'பார்வைப்புல ஒத்திசைவு கதிர்வீச்சு வரைவி' (OCT) ஆனது விழித்திரைக்கு கீழான பகுதியின் விபரங்களடங்கிய முப்பரிமாண (3G) படத்தை வழங்கும் வசதியை கொண்டுள்ளது. அதன்மூலம் ஒரு கண்ணின் சுகாதார நிலைமை தொடர்பான முழு விபரமும் உள்ளடங்கிய கதிர்ப்படம் கிடைப்பது உறுதி செய்யப்படுகின்றது.
கண்ணின் உள்ளக கட்டமைப்பை ஆழமாக படம்பிடித்து காட்டுவதற்காக உலகளவில் பயன்படுத்தப்படும் ஒருசில உபகரணங்களுள் ஒன்றாக இது காணப்படுகின்றது. இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு ஒருசில வினாடிகளே எடுக்கின்றது. அத்துடன், நபர் ஒருவர் இந்த இயந்திரத்திற்குள்ளாக பார்வையை செலுத்துகின்ற போது எந்த உபகரணமும் அவரது கண்களை தொடாது. அதேவேளை, விழிமையப்புள்ளி (Macular) மற்றும் பார்வை நரம்பு கலத்தின் தலைப்பகுதி (Nerve head) மீதான பரிசோதனைகள் தொடர்பில் மிகச் சரியான தரவுகளை இது வழங்கும்.
கோல்டன் கீ வைத்தியசாலையின் பிரதம கண் சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர். சாலிய பத்திரண கருத்துத் தெரிவிக்கையில், 'எமது வைத்தியசாலையை ஆதரிக்கும் பல நூற்றுக் கணக்கான நோயாளர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை நாம் எப்போதும் தேடிப் பெற்றுக் கொண்டுள்ளோம். அந்த வழியில் இது இன்னுமொரு காலடியாகும். அத்துடன் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தின் ஊடாக மிகச் சிறந்த மருத்துவ பராமரிப்பை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் பலப்படுத்துவதாகவும் இது அமைகின்றது. பல புதுமையான சிறப்பம்சங்களை வழங்கும் இவ் இயந்திரமானது, இலங்கையிலுள்ள கண்ணோயியல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், விஷேடமாக விழி முன்னறை (Anterior) தொடர்பான மருத்துவ பிரிவிற்கும் மற்றும் க்ளவ்கோமா (Glaucoma) சிகிச்சை நிபுணர்களுக்கும் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருக்கும்' என்றார்.
இந்த இயந்திரத்திலுள்ள பார்வைப்புல ஒத்திசைவு கதிர்வீச்சு வரைவி (OCT) என்பது ஊடறுப்பு முறைமை அல்லாத படமாக்கல் பரிசோதனை முறைமையை கொண்டதாகும். இவ் இயந்திரம் நோயாளியின் விழித்திரையை, கண்ணின் பின்புறமாக படர்ந்துள்ள மெல்லிய உணர்திறனான திசுக்களை குறுக்குவெட்டாக படம்பிடிப்பதற்கு ஒளி அலைகளை பயன்படுத்துகின்றது. OCT இயந்திரத்தை பயன்படுத்துவதன் ஊடாக விழித்திரையின் தனித்தன்மை வாய்ந்த அடுக்குகள் ஒவ்வொன்றையும் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஒரு OCT பரிசோதனையானது முன்கூட்டியே நோயை கண்டறியவும் அதேபோல் தீவிரமான கண் நோய்களை மேற்பார்வை செய்யவும் உதவி புரியலாம்.
'விழித்திரை சார்ந்த நோய்கள், குறுங்கோண (Angle-Closure) க்ளவ்கோமா (Glaucoma) உள்ளிட்ட குளுக்கோமா நோய்கள், வயதுடன் தொடர்புபட்ட நரம்புச் சிதைவு, நீரிழிவு சார்ந்த கண் நோய்கள் மற்றும் விழிவெண்படல நோய்கள் போன்றவற்றை கண்டறிவதற்கும் முகாமை செய்வதற்கும் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும். இந்த புதிய இயந்திரத்தின் துணையுடன் வைத்தியர்கள் தற்போது மேலும் மிகச் சரியான மற்றும் முன்னேற்றகரமான மருத்துவ அறிக்கைகளை தமது நோயாளர்களுக்காக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்' என்று டாக்டர் சாலிய பத்திரண மேலும் குறிப்பிட்டார்.
இந்த புரட்சிகரமான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட இயந்திரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொரு நோயாளி தொடர்பான தரவுத் தளத்தையும் தன்னகத்தே பேணிப் பராமரிக்கின்றது. அடுத்த முறை பரிசோதிக்கும் போது இலகுவாக பார்வையிடக் கூடிய விதத்தில், நோயாளர்களின் தகவல்களை இவ்வியந்திரம் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும். இவ்வசதியானது, ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என வைத்தியர்கள் கண்காணிப்பு செய்வதற்கும் சரிபார்ப்பதற்கும் அதேபோன்று புதிய சிகிச்சை ஒன்றை பரிந்துரை செய்வதற்கும் இடமளிக்கின்றது.
கொழும்பு நகர எல்லையான ராஜகிரியவில் சௌகரியமான இடத்தில் அமையப் பெற்றுள்ள கோல்டன் கீ வைத்தியசாலையானது, கண், காது, மூக்கு, தொண்டை அத்துடன், தலை மற்றும் கழுத்துக்கு அருகிலுள்ள உறுப்புகள் ஆகிவற்றில் ஏற்படும் சீர்குலைவுகளுக்கு மருத்துவ பராமரிப்பு அளிப்பதில் மிகச் சிறப்பாக செயலாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ள விஷேட வைத்தியசாலையாகும். கோல்டன் கீ வைத்தியசாலையானது ஆரம்பநிலை மருத்துவ பராமரிப்பை வழங்குவதுடன் வெளிநோயாளர், உள்ளக நோயாளர்களின் மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கான தொடர்பீட்டு நிலையமாக (Referral Centre) சேவையாற்றுகின்றது.
2007ஆம் ஆண்டு இவ் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டதில் இருந்து, நாட்டின் தனியார் துறையில் முதலாவது அதி விஷேட வைத்தியசாலையாக திகழ்வதன் மூலம் வரலாறு படைத்துள்ளது. அதேநேரம் உள்நாட்டில் மட்டுமன்றி தெற்காசிய பிராந்தியத்திலேயே - கண் மற்றும் காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகளுக்கான தனிச் சிறப்புவாய்ந்த மருத்துவ நிலையமாகவும் திகழ்கின்றது.
41 minute ago
53 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
8 hours ago