Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 27 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னணி சர்வதேச அதிவேக சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோக சேவை வழங்குநரான DHL நிறுவனம் வாழ்நாளில் ஒரேயொரு தடவை மாத்திரம் கிடைக்கும் அரிய வாய்ப்பான 2015ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண றக்பி போட்டிகளில் (RWC 2015) போட்டிப் பந்தினை கையளிப்பதற்கான வாய்ப்பினை இலங்கையின் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை றக்பி விளையாட்டு மாணவரான ஹர்ஷ சமரசிங்க பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறது.
இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி லீசெஸ்டர் நகரில் நடைபெறவுள்ள போட்டியில்;, உத்தியோகபூர்வ பந்தினை இவர் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. DHL Match Ball Delivery செயற்திட்டத்தின் ஒன்லைன் மற்றும் SMS வாக்களிப்பு பிரச்சாரத்தின் மூலம் இவர் இந்த வாய்ப்பினை பெற்றுக்கொண்டுள்ளார்.
DHL நிறுவனமானது இலங்கை றக்பி கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடத்திய வாக்களிப்பு முறைகளான ஒன்லைன் வாக்குப்பதிவு மற்றும் SMS பிரச்சாரம் என்பவற்றினை ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்திருந்தது. உலகக்கிண்ண றக்பி போட்டிகளில் உத்தியோகபூர்வ போட்டிப் பந்தினை கையளிப்பதற்கான வாய்ப்பினை பெற அதன் வெற்றியாளர் மூன்று கட்ட தெரிவு செயல்முறைகளை வெற்றிகொள்ள வேண்டியிருந்தது.
இறுதி கட்டத்தில் முந்தைய போட்டிகளில்; செயற்தகு முறையில் விளையாடி தெரிவு செய்யப்பட்ட 20 போட்டியாளர்களுக்கு நலன் விரும்பிகள், குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் வாக்குகள் கிடைத்திருந்தன. இறுதி போட்டியாளர்களுக்கு SMS வாக்குகளுக்கு மேலதிகமாக, DHL Express ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஒன்லைன் வாக்குப்பதிவு ஊடாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.
கண்டி திரித்துவக் கல்லூரியைச் சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட றக்பி விளையாட்டு வீரரான ஹர்ஷ சமரசிங்க, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2015 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண றக்பி விளையாட்டு போட்டிகளில் உத்தியோகபூர்வ பந்தினை இலங்கை சார்பாக கையளிப்பதற்கான மாபெரும் கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கான வெகுமதி பக்கேஜில் குறித்த போட்டிக்காக சமரசிங்க மற்றும் அவருடன் பயணிக்கும் பெற்றோருக்கான இரு விமான பயணச்சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆடை, றக்பி பந்து, திரும்பி வருவதற்கான இரு விமான பயணச்சீட்டுகள், இரு இரவுக்கான தங்குமிட வசதி, Thank You Gift போட்டி பந்து கையளிப்பு புகைப்படம் போன்றன உள்ளடங்கிய RWC 2015 DHL Merchandise Kit உம் உள்ளடக்கப்பட்டுள்ளன.
'ஹர்ஷவின் வாழ்வில் மிகவும் பெருமைக்குரிய தருணம் இதுவாகும். வாழ்நாளில் ஒரேயொரு தடவை மாத்திரம் கிடைக்கும் இந்த வாய்ப்பு ஊடாக அவரது கனவினை நனவாக்கித் தர முடிந்துள்ளமை குறித்து DHL மிகவும் மகிழ்ச்சியடைகிறது. இது ஓர் அரிய வாய்ப்பாகும். நாம் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக நம்புகின்றோம்' DHL Express ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைவர் திமித்ரி பெரேரா தெரிவித்தார்.
உலகக் கிண்ண றக்பி போட்டித்தொடரின் உலகளாவிய பொருட்கள் விநியோக சேவை பங்காளர் எனும் ரீதியில் DHL ஆனது, உள்நாட்டில் றக்பி கனவு நிகழ்வாக கருதப்படும் DHL Match Ball Delivery செயற்திட்டத்தினை முன்னெடுத்திருந்தது. இந்த முயற்சியானது 2015 உலக கிண்ண றக்பி போட்டிகளில் நடைபெறவுள்ள 48 போட்டிகளிலும் போட்டிப் பந்தினை கையளிப்பதற்காக 8 இலிருந்து 15 வயதுக்குட்பட்ட பாடசாலை றக்பி மாணவர்களை தேர்ந்தெடுக்கும் DHL இன் உலகளாவிய செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது.
DHL Express நிறுவனமானது இலங்கையில் 'A' பிரிவு பாடசாலைகளின் 36 பிரிவுகளில் முதற்கட்டமாக 80 றக்பி விளையாடும் மாணவர்களை தெரிவு செய்வதற்காக இலங்கை றக்பி கால்பந்தாட்ட கழகத்துடன் (SLRFU) கைகோர்த்து செயற்பட்டு வந்துள்ளது. இலங்கை தேசிய அணி அங்கத்தவர்கள் மூலம் றக்பி செயலமர்வின் போது வெளிப்படுத்தப்பட்ட றக்பி திறமைகளின் அடிப்படையில் 20 மாணவர்கள் இதில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த செயற்திட்டமானது பல புதிய பங்குபற்றுநர்கள் மற்றும் ரசிகர்களை இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் எனவும், RWC 2015 போட்டித்தொடரின் வாக்குறுதிகளுக்கு மேலதிகமாக ஒர் ஆர்வத்தையும் உண்டாக்குகிறது' என மேலும் பெரேரா தெரிவித்தார்.
DHL நிறுவனம் அதன் வாடிக்கையாளருக்கு தினசரி வழங்கும் வாக்குறுதிகளான விருப்பு, விரைவு மற்றும் முடியும் என்ற ஈடுபாடு ஆகியவற்றுக்கும் விளையாட்டினை கட்டியெழுப்பும் குழு செயற்பாடு, நோக்கம் மற்றும் வெற்றி பெறுவதற்கான ஆர்வம் மற்றும் பெறுமதிகள் ஆகியவற்றுக்கிடையே மிகப்பெரிய ஒற்றுமை இருப்பதாக நம்புகிறது.
DHL நிறுவனமானது உள்நாட்டு கழகங்கள் மற்றும் அடிமட்ட முயற்சிகள் ஊடாகவும், உலகளாவிய முன்னணி கைகோர்ப்புகள் ஊடாகவும் உள்நாடு மற்றும் உலகம் முழுவதும் செயற்தகு முறையில் றக்பி விளையாட்டுக்களை முன்னெடுத்து வருகிறது.
2015 உலக கிண்ண றக்பி விளையாட்டுக்கான உத்தியோகபூர்வ விநியோக பொருட்கள் பங்காளர் எனும் ரீதியில் DHL ஆனது அணிகளுக்கான போக்குவரத்து மற்றும் றக்பி போட்டிகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளடங்கலாக நிகழ்ச்சிக்கான பொருட்கள் விநியோகங்களை முழுமையாக கையாளவுள்ளது.
40 minute ago
52 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
8 hours ago