2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் விற்பனை பிரதிநிதிகளுக்கு விருது

A.P.Mathan   / 2015 மே 27 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதற்தர மூலிகை அழகுச்சாதன வர்த்தக உற்பத்தி நாமமான 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்' உற்பத்திகளை தயாரிக்கும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின், விற்பனை பிரதிநிதிகளின் வருடாந்த விருது விழா மற்றும் மாநாடு, அண்மையில் மிக கோலாகலமாக நடைபெற்றதுடன் நாடுதழுவிய ரீதியாக 100 இற்கும் மேற்பட்ட விற்பனை பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர். 
நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நிறுவனத்தின் தலைவர் / முகாமைத்துவ பணிப்பாளர் சமந்தகுமாரசிங்க தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது நேச்சர்ஸ் சீக்ரட்ஸின் வர்த்தக நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு சிறப்பாக செயற்பட்ட விற்பனை பிரதிநிதிகளுக்கான விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

வருடத்தின் சிறந்தவிற்பனை பிரதிநிதிகளுக்கான சைனிங் ஸ்டார் (Shining star) விருது உட்பட பலவிருதுகள் வழங்கப்பட்டதுடன் அந்த அத்தனை விருதுகளையும் கொழும்பிற்கு வெளிபிரதேசங்களை சேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் வென்றெடுத்தமை விசேட அம்சமாகும். 

இதேவேளை பெண்டா பேபி உற்பத்திகளை அதிகம் விற்பனை செய்த பிரதிநிதிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X