2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஆசிய மையத்துக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய Pearson

A.P.Mathan   / 2015 ஜூன் 03 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

Pearson அண்மையில் 30000 புத்தகங்களை ஆசிய மையத்துக்கு நன்கொடையாக வழங்கியிருந்தது. ஆசிய மையம் என்பது இலாப நோக்கமற்ற சர்வதேச அபிவிருத்தி தாபனம் என்பதுடன், அபிவிருத்தியடைந்து வரும் ஆசிய பகுதிகளில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. இலங்கையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முதற் தடவையாக Pearson இன்டர்நஷனலுடன் ஆசிய மையம் கைகோர்த்துள்ளது.

கவனமாக தெரிவு செய்யப்பட்ட ஆங்கில மொழி புத்தகங்கள் பொருத்தமான தேவையை கொண்ட பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், நூலகங்கள், தாபனங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 

உத்தியோகபூர்வ கையளிப்பு வைபவத்தில் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரேமிளா போல்ராஜ் பங்கேற்றிருந்ததுடன், இலங்கைக்கான பிரதிநிதி தினேஷ டி சில்வா விக்ரமநாயக்க மற்றும் ஆசியாவுக்கான புத்தகங்கள் மற்றும் மேற்பார்வை அமைப்பின் பணிப்பாளர் அன்டன் நல்லதம்பி ஆகியோர் ஆசிய மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தனர்.

இது தொடர்பில் போல்ராஜ் கருத்து தெரிவிக்கையில், 'ஆசிய மையத்தின் செயற்பாடுகள் என்பது வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. Pearson ஐச் சேர்ந்த நாம், சகல பயிலுநர்களுக்கும் அவசியமான சாதனங்களை வழங்குவதை எதிர்பார்ப்பாக கொண்டுள்ளது. எமது பரிபூரண வளங்கள் அல்லது பயிற்சிப்பட்டறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் மூலமாக இவை மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய ஆசிய மையத்துக்கான புத்தக நன்கொடை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நன்கொடையின் மூலமாக, நாம் வளங்கள் குறைவாக காணப்படும் பயிலுநர்களுக்கு அவசியமான வளங்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்' என்றார்.

ஆசிய மையத்தின் மூலமாக 1954 ஆம் ஆண்டு முதல், 4.5 மில்லியன் புத்தகங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. வருடாந்தம், இதன் மூலமாக 100,000 புதிய புத்தகங்கள் அமெரிக்க வெளியீட்டாளர்களின் மூலமாக நன்கொடை செய்யப்படுகின்றன. நாட்டிலுள்ள 1000க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு இந்த புத்தகங்கள் சென்றடைந்துள்ளன. இவற்றில் இரண்டாம் நிலை பள்ளிகள், அரசசார்ப்பற்ற நிறுவனங்கள், அரசாங்க முகவர் அமைப்புகள், பொது நூலகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்பள்ளிகள் போன்றன அடங்கியுள்ளன.

'இந்த புதிய பங்காண்மையில் பெருமளவு எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வத்துடன் ஆசிய மையம் கைகோர்த்துள்ளது. உயர் தரம் வாய்ந்த ஆங்கில மொழி புத்தகங்கள் மற்றும் ஏனைய வாசிக்கும் புத்தகங்களை இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு விநியோகிப்பது தொடர்பில் நாம் எப்போதும் கவனம் செலுத்துகிறோம், Pearson இடமிருந்து புதிதாக கிடைத்துள்ள இந்த புத்தகங்கள் உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளன. மிக முக்கியமாக பெருமளவான புத்தகங்கள் உயர் தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் அமைந்துள்ளன.  நிபுணத்துவம் வாய்ந்த முறையில் மொழி நடை பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் Pearson உடன் தொடர்ச்சியாக கைகோர்த்து செயலாற்ற திட்டமிட்டுள்ளோம்' என ஆசிய மையத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தினேஷ டி சில்வா கருத்து தெரிவித்தார்.

92 நாடுகளில் சர்வதேச பிரசன்னத்தைக் கொண்டுள்ள Pearson தகைமைகள் பரிபூரணமான தகைமைகளை வௌ;வேறு வயதினருக்கு வழங்கி வருகிறது. தற்போது Pearson ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை கீழ் பிரிவுகளுக்கு GCSE, சர்வதேச GCSE, கபொத உயர் தரம், சர்வதேச உயர் தரம் மற்றும் BTEC போன்ற தொழில் தகைமைகள் வழங்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X